திடீரென தோன்றிய மகான்.. 10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்!
10 அடி குழி தோண்டி பூஜை செய்து வருகிறார் சாமியார் விஸ்வநாதன்
Recommended Video
ஈரோடு: கனவில் தோன்றிய மகான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக, 10 அடி ஆழ குழிக்குள் சாமியார் செய்து வரும் பிரார்த்தனையை காண பக்தர்கள் பலரும் ஈரோடு வந்து செல்கிறார்கள்.
அந்தியூர் அருகே நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தர் விஸ்வநாதன். இவருக்கு கல்யாணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஆனால், 25 வருஷமாக குடும்பத்தை விட்டு துறவறத்தில் உள்ளார்.
ஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா கற்று தருகிறார்.. நிறைய ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார்.

மகான்
இந்நிலையில் விஸ்வநாதன், அமர்நாத் யாத்திரை சென்றார். அங்கு ஒருநாள் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மகான் கனவில் தோன்றினாராம். ''நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருந்தால், உலக நன்மை கிடைக்கும்" என்று சொல்லி உள்ளார்.

தோற்றம்
கனவில் தோன்றிய அந்த மகான் சொன்ன வார்த்தையை கேட்டு, நல்லிக்கவுண்டன்புதூர் வந்த விஸ்வநாதன், ஆளே வித்தியாசமாக இருந்தார். பெரிய தாடி வளர்ந்திருந்தது.. நிஜானந்த காசி விஸ்வநாத சாமி என்று தன் பெயரையும் மாற்றி கொண்டார்.

மவுன விரதம்
மகான் சொன்னபடி, 10 அடி ஆழ பள்ளத்தை தோண்டி, அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் இருக்க போவதாக ஊருக்குள் சொன்னார். அப்போது இவர் பேச்சை ஒருசிலர் நம்பவில்லை.. ஒருசிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.

48 நாள் விரதம்
சொன்னபடியே பள்ளம் தோண்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். போன 17-ந் தேதி இரவு அந்த குழிக்குள் இறங்கிய விஸ்வநாதன் தியானம், பூஜை செய்து, எதுவும் சாப்பிடாமல்.. மவுன விரதத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.. மொத்தம் 48 நாள் விரதம் இருக்க போகிறாராம்.

பக்தர்கள்
இப்போது அங்கு பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுத்து வருகிறது.. பக்தர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி விளக்கம் சொல்கிறாராம்.. மேலும் குழிக்குள் இருந்தே ஆசியும் வழங்கி வருகிறாராம்.. இதனால் நல்லிக்கவுண்டன்புதூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications