பத்திரப்பதிவு.. ஈரோடு சத்தியமங்கலம் சார் பதிவாளர்.. தப்பிக்க வேண்டியவர்.. கடைசி நொடியில் ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான 1,916 சதுர அடி காலி இடத்தை தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்தார். ஆனால் பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என சார் பதிவாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளரும், தற்காலிக ஊழியரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் சார் பதிவாளர்கள் குறித்து அவ்வப்போது புகார்கள் வருவது உண்டு. இப்படிப்பட்டவர்கள் மீது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேநேரம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கையும் களவுமாக சிக்க வைக்கவும் விரும்பினால், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கலாம். அவர்களின் வேலையே அரசு ஊழியர்களின் ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுப்பது தான். ஆடியோ ஆதாரம் அல்லது வீடியோ ஆதாரம் இருந்தால், கையும் களவுமாக சிக்க வைக்க புகாரை உடனே எடுப்பார்கள். ரகசியமாக சென்று லஞ்சப்பணத்தை கொடுக்க வைத்து பிடிப்பார்கள். சமீப காலமாக ஏராளமான அதிகாரிகள் இப்படி சிக்கியுள்ளனர். விஏஓ முதல் தாசில்தார் வரையிலும், உதவியாளர் முதல் சார் பதிவாளர் வரையிலும் எல்லா துறையிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் என்பவருக்கு 1,916 சதுர அடி காலி இடம் இருக்கிறது. நல்லம்மாள் தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய நம்பியூர் சின்ன பீளமேட்டை சேர்ந்த ஆன்லைன் சர்வீஸ் செய்து வரும் சேதுபதி (வயது 32) என்பவரை அணுகியிருக்கிறார்.
சேதுபதி இதுகுறித்து நேற்று சத்தியமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வன் (51) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேதுபதி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் சென்று புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை சேதுபதியிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இதையடுத்து அவர் நேற்று காலை 11 மணி அளவில் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றுள்ளார்.
அதற்கு தமிழ்ச்செல்வன், அந்த பணத்தை தற்காலிக ஊழியரான தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் சக்திவேல் என்பவரிடம் கொடுத்து விடும்படி கூறினாராம். இதையடுத்து கடைசி நொடியில் அவர் தற்காலிக ஊழியர் சக்திவேலிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சக்திவேலையும், சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications