நிலத்தை மீட்டுதர வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற தம்பதி - ஈரோடு ஆட்சியர் அலுலகம் முன்பு பரபரப்பு!
ஈரோடு: அடமானம் வைத்த நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தம்பதி தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த சுந்தரம்- பாப்பாள் தம்பதியர், விவசாய கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, சுந்தரத்தின் உடல்நிலை மோசம் அடைந்ததன் காரணமாக, தங்களுக்குச் சொந்தமான 82 செண்டு நிலத்தை பானுப்புத்தூரைச் சேர்ந்த பாலு என்பவரிடம் அடமானமாக வைத்து 60 ஆயிரம் கடனாக பெற்றுள்ளனர்.

அதற்கான வட்டியும் முதலுமாக 2019 ஆண்டு, மூன்று லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பாலுவிடம் திரும்ப ஒப்படைத்து, அடமானத்திற்கான பத்திரத்தை திரும்ப வழங்குமாறு சுந்தரம் கேட்டுள்ளார். ஆனால், நிலத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்ட பாலு, கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு விவசாய நிலத்தை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாலுவிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல், நிலத்தை கொடுக்கு மறுத்ததோடு, அடியாட்களை வைத்து சுந்தரத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசு அலுவலகத்தில் புகார் அளித்தும் முறையான விசாரணை நடக்காததால் விரக்தியடைந்த அந்த தம்பதி, மாவட் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கணவன் மனைவி இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக ஓடிச் சென்று அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து, இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுந்தரம் போலீசாரிடம் கூறுகையில், நிலத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு, நிலத்தை கொடுக்கு மறுத்ததோடு, அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்தியதோடு, ஜாதி பெயரை கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உள்ளதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் அவர்களின் தாக்குதலை தடுக்க வந்த தனது மனைவியின் புடவையை கிழித்து மானபங்கப்படுத்தியதாகவும் சுந்தரம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications