Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு பெண் .. பைத்தியமான 90ஸ் கிட்ஸ்.. யாருக்கும் நடக்க கூடாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது திருமணம் செய்து வைக்கக் கோரி நபர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க முயற்சித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இன்றைக்கு பலரும் பெண் கிடைக்காமல் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கு குழந்தை பிறப்பு குறைந்து போனதால், எதிர்காலத்தில் பாலின விகிதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் 30 வருடங்களுக்கு முன்பு மற்றும் 25 வருடங்கள் முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்று குடும்ப கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்பட்டதால், பாலின விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இப்போது நிலவுகிறது.

Marriage collector

அதுமட்டுமின்றி படித்த பெண்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. இதனால் படிக்காத ஓரளவு படித்த வாழ்க்கையில் செட்டில் ஆகாதவர்களுக்கு திருமணம் என்பது கனவாகிவிட்டது. குறிப்பாக 30 வயது கடந்தவர்கள் திருமணம் செய்யாமல் இருந்தால், அவர்கள் பெண் கிடைப்பது என்பது மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது‌. கொங்கு மண்டலத்தில் இன்றைக்கு பெரிய அளவில் திருமண தடைகளை பல ஆண்கள் சந்திக்கிறார்கள்.

எல்லா சமூகத்திலும் பெண் கிடைப்பது என்பது இப்போது சவாலாக மாறிவிட்டது. திருமண வலைதளங்களிலும் புரோக்கர்களிடமும் கூறி பெண்களை தேடினாலும் 10 வயது வித்தியாசம் வரை பல ஆண்கள் திருமணம் செய்கிறார்கள். சிலர் இன்றுவரை பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அப்படித்தான் இன்றும் முகாம் நடந்தது.

இந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஈரோடு புதுமைகாலனி பகுதியை சேர்ந்த முகமது ( சற்று மனநலம்பாதிக்கப்பட்டவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் தனது தாயாருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் தனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில் , திருமணம் செய்து வைக்க சொல்லி வலியுறுத்தி மனு அளிக்க வந்தார்‌. இந்நிலையில் அப்போது அங்கு அமர்ந்திருந்த அனைத்து துறை அதிகாரிகள் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ...

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாய் மகன் ஆகிய இருவரையும் வெளியேற்ற முயற்சி செய்த போது கூச்சலிட்டார். தொடர்ந்து வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்த போலீசார் அவர்களை ஆட்டோ ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் குறித்து காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு பெண் தேடுவார், காலகாலத்தில் திருமணம் செய்து கொள்வது நல்லது. ஒருவேளை திருமணம் செய்யாமல் போனால், வயது தடை காரணமாகவும், வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்ற காரணத்திற்காகவும் பெண் கிடைக்காமலே போக கூடும். 40 வயது தொட்ட நிலையில் பல ஆண்கள், இப்போது அந்த நிலையில் இருக்கிறார்கள்.. எனவே வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் திருமணம் என்ற இலக்கை மறந்து திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆவது நல்லது என்கிறார்கள் பலர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+