ஆரம்பிச்சிட்டாங்க நாம் தமிழர்.. உள்ளே விட மாட்டீங்களா? ஓட்டு எண்ணும்முன்பே மல்லுக்கட்டிய சீதாலட்சுமி
ஈரோடு: இன்று ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை துவங்கும் நேரத்தில், சீதாலட்சுமியின் ஏஜெண்ட்டுகளை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகளுடன் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதின.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சி மட்டும், திமுகவுடன் போட்டியிட்டது.
"திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன" என்று எழுதியிருந்தார்

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியிருக்கிறது.. வாக்கு எண்ணிக்கையானது சித்தோடில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக மொத்தம் 251 தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு இருப்பறை திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.. இதில், விசி சந்திரகுமார் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
முன்னதாக, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் காலையிலேயே வந்து உட்கார்ந்துவிட்டனர்.. வாக்கு எண்ணிக்கை துவங்கும் நேரத்தில், சீதாலட்சுமியின் ஏஜெண்ட்டுகளை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகளுடன் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"ஒரு மணி நேரமாக காத்திருக்கிறோம்.. ஏன் எங்களை உள்ளே விட மாட்டேங்கறீங்க? ஜனநாயகத்தின் தூணான ஊடகத்தையே இவர்கள் நசுக்க பார்க்கிறார்கள்.. திமுகவில காசு தந்து வாக்கு கேட்கும்போதே எங்களுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது" என்றார். அங்கிருந்த அதிகாரிகளுடன் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
தபால் ஓட்டு எண்ணும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சீதாலட்சுமி, "ஏமாற்றியும், கள்ள ஓட்டுக்களை செலுத்தியும், பணம் தந்தும் ஓட்டு போட்டார்கள்.. நிறைய நெருக்கடிகளுக்கு நடுவில்தான் வாக்குப்பதிவு நடந்தது. இருந்தாலும், அதையும் தாண்டி, எதற்கும் விலைபோகாமல், இந்த மண்ணில் மாற்றம் வேண்டும், நாம் தமிழர் வந்தால், இந்த மாற்றத்தை தர முடியும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள்.. அந்த வாக்குகள் மட்டுமே எங்களுக்கு வெற்றியை தரும்.. கள்ள ஓட்டுப்போடுவதைதான் இங்கு தடுக்கவே முடியவில்லை" என்றார்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications