ஆட்டம் காலி படுதா காலி! ஈரோட்டிலிருந்து பேக் அப்! நிம்மதி பெருமூச்சுவிடும் அரசியல் கட்சி நிர்வாகிகள்
ஈரோட்டிலிருந்து புறப்பட்ட வெளியூர் அரசியல் கட்சி நிர்வாகிகள்.
ஈரோடு: ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி உறக்கமின்றி வீதிவீதியாக ஓட்டுக்கேட்டு வந்த வெளியூர் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒரு வழியாக இன்று பேக் அப் செய்துவிட்டனர்.
கடந்த ஒரு மாதமாக திமுகவில் அமைச்சர்களும், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களும் சொந்தக் கட்சி நிர்வாகிகளை டிரில் வாங்கி வந்தனர்.
கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான செலவுகளை மட்டுமே திமுகவில் அமைச்சர்களும், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களும் கவனித்துக் கொண்டனர்.
மற்றபடி ஓன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்பவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முடிந்தவரை தங்கள் கைக்காசை செலவு செய்து உணவு, இருப்பிட செலவுகளை கவனித்துக் கொண்டனர்.

தேர்தல் திருவிழா
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த இடைத்தேர்தல் திருவிழாவின் கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது. நாளை மறுதினம் வாக்களிக்கும் நாள் என்பதால் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதேபோல் வெளியூர் மற்றும் வெளிமாவட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து இன்று மாலையே வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.

ஆளை விட்டால் போதும்
இதனால் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வெளிமாவட்ட நிர்வாகிகள் ஆளை விட்டால் போதுமடா சாமி என்கிற கதையாக சொந்த ஊர்களுக்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் தயாராகிவிட்டனர். இன்று இரவுக்குள் அவர்கள் ஈரோட்டிலிருந்து புறப்பட்டு விடுவார்கள். கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி உறக்கமின்றி வீதிவீதியாக ஓட்டுக்கேட்டு வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் எப்போது பிரச்சாரம் முடியும் எப்போது ஊருக்கு செல்லலாம் என்பதில் தான் குறியாக இருந்தார்கள்.

கடும் பணிச்சுமை
காரணம் அங்கு அந்தளவுக்கு கடும் பணிச்சுமைகள் இருந்து வந்தன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என என்ற பாகுபாடும் இல்லாமல் இரண்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளையும் அந்தக் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் தேர்தல் களத்தில் டிரில் வாங்கிவிட்டனர். இன்னும் பலருக்கும் பர்ஸ் காலியானது தான் மிச்சம். அதை அவர்கள் வெளியே சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் காட்சிகளையும் ஈரோடு கிழக்கில் காண முடிந்தது.

தேர்தல் முடிவு
இதனிடையே தேர்தல் முடிவுக்கு பிறகு தான் யார் யார் எந்தெந்த அளவில் பணியாற்றி இருக்கிறார்கள், எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications