அரசியல் எதிர்காலமே போயிடும்.. ஆபத்தை கணித்த எடப்பாடி! இடைத்தேர்தலை தவிர்க்க முடிவு? "அது" உண்மையா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுப்பார், அங்கே களநிலவரம் எப்படி இருக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஆருடம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்து இருந்தனர். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடு அவைக்கு வந்து அமளி செய்த எடப்பாடி இந்த முறை அப்படி எதுவும் செய்யாமல் ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமர்ந்து இருந்தார்.
இன்னொரு பக்கம் இரண்டு பேருமே ஒன்றாக ஆளுநர் கொடுத்த பொங்கல் விருந்தில் கலந்து கொண்டனர். இருவரும் எதிர் எதிரே அமர்ந்து இருந்தனர். இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை.

நெருக்கம்
ஆனாலும் இவர்கள் ஒன்றாக கலந்து கொண்டது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவையும், அமித் ஷா வருகையையும் தவிர்த்தவர்தான் எடப்பாடி. ஆனால் தற்போது அவரே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். இவர்கள் இப்படி திடீரென லேசாக நெருக்கம் காட்டுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியின் இந்த திடீர் நிலைப்பாட்டிற்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருப்பதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார். விரைவில் இங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிளான் என்ன என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரவீந்திரன் துரைசாமி
அவர் அளித்த பேட்டியில், அதிமுக தற்போது தோற்றுப்போன கட்சி. தோற்றுப்போன கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். பன்னீர்செல்வம் இல்லாமல் ஒற்றை தலைமையை வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரு வாக்கு வங்கி உள்ளது. வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத ஜாதியினர் அவருக்கு ஆதரவு தருகிறார்கள். அது எத்தனை சதவிகிதம் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் அரசியல் செய்ய முடியும்.

நெருக்கம்
இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது. திமுக கூட்டணி வென்ற தொகுதி இது. இது முன் அதிமுக வென்ற தொகுதிகளிலேயே இடைத்தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்து இருக்கிறது. அதேபோல் இந்த முறை ஆகிவிடுமோ என்று எடப்பாடி யோசிக்கிறார். தோல்வி அடைந்தால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று அவர் பயப்படுகிறார். அவர் சார்பாக அதிமுக களமிறங்கி, கட்சி தோல்வி அடைந்தால் அவரின் அரசியல் எதிர்காலமே பாதிக்கும். இப்போது தேர்தலில் போட்டியிட்டு இரட்டை இலை சின்னம் முடங்கவோ, அதிமுக தொண்டர்களிடம் மதிப்பை இழக்கவோ எடப்பாடி விரும்பவில்லை.

ஏன் நெருக்கம்
அதனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலும் சீட்டை கொடுத்துவிட்டு எடப்பாடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதோடு இங்கே தேர்தலில் அதிமுக போட்டியிட்டாலும் ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்ற சிக்கல் எல்லாம் இருக்கிறது. இது போக அதிமுக, பாஜக எல்லாம் தனித்து போட்டியிட்டால் திமுக மிக எளிதாக வென்றுவிடும். ஏற்கனவே திமுகவிற்கு அங்கு ஆதரவு உள்ளது. கமல்ஹாசன் ஆதரவு, செந்தில் பாலாஜி ஆதரவு, ஆளும் கட்சி என்ற ஆதரவு எல்லாம் உள்ளது. திமுக எப்படியும் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்று வென்றுவிடும். திமுக போக எடப்பாடிக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் என்று பல போட்டிகள் உள்ளன.

எடப்பாடி
இப்படி பல போட்டிகள் இருப்பதால் எடப்பாடி பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலும் எடப்பாடி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இங்கே போட்டியிட இடம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. கொங்கு மண்டலத்தில் வெள்ளாள கவுண்டர்களை தவிர பெரிதாக மற்ற ஜாதிகள் எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. கொங்கு வேளாள கவுண்டர்கள் பெரிய ஜாதியினர்தான். ஆனால் அதே கொங்கு வேளாள கவுண்டர்களை கவர பாஜக அண்ணாமலையை களமிறக்கி உள்ளது. ஸ்டாலினும் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி போன்ற தலைவர்களை களமிறக்கி அரசியல் செய்து வருகிறார்.

ஓபிஎஸ்
அப்படி இருக்க எடப்பாடிக்கு மட்டும் இங்கு ஆதரவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. வெள்ளாள கவுண்டர்களை பிசியில் சேர்த்தது கருணாநிதி. அவர்களின் உயர்விற்கு கருணாநிதி ஒரு காரணமாக இருந்தார். இடைத்தேர்தலில் போது வெள்ளாள கவுண்டர்களின் வாக்குகள் செந்தில் பாலாஜி வழியாக திமுகவிற்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தோல்வியை உணர்ந்து கொண்ட எடப்பாடி.. இப்போதே சமாதான தூதுகளை செய்து போட்டியில் இருந்து விலகிக்கொள்ள பார்ப்பதாகவே நான் கருதுகிறேன். எடப்பாடி சமாதானமாகி போகவில்லை என்றால் அது பெரிய ரிஸ்க் ஆகும்.

அதிமுக ரிஸ்க்
பாஜக, ஓபிஎஸ் போன்றவர்களை எடப்பாடி எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்த்தால் வாக்கு பிரிந்து திமுக வெல்லும். இது பெரிய ரிஸ்க். அப்படியே எடப்பாடி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அவர் பயந்து ஓடிவிட்டார் என்ற விமர்சனம் வைக்கப்படும். அதுவும் எடப்பாடிக்கு சிக்கலாகும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடிக்குதான் சிக்கல். தேர்தலுக்காக எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்திடம் இறங்கிதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications