குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள்.. தைரியமா புகார் கொடுங்கள்.. பெண் போலீஸார் விழிப்புணர்வு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை போலீஸாரிடமே புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சில புகார்களும் நடவடிக்கைகளும் வரத்தான் செய்கிறது.
என்றாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் புகார்கள் கொடுக்கிறார்களா என்றால் அது சந்தேகம்தான். நிறைய பேர் குடும்ப கவுரவம், குழந்தையின் எதிர்காலம் கருதி பாலியல் குற்றங்கள் குறித்து போலீஸாருக்கு புகார் கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.

தைரியம்
இது அந்த குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தை அளிக்கிறது. மேலும் தவறுகளை செய்ய தூண்டுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் காக்கும் கரங்கள் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரகசியம்
இதில் தங்கள் ஊரில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அது போல் தகவல் கிடைத்தால் உண்மை என்ற பட்சத்தில் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்பவரின் தகவல் மற்றும் பெயர் ரகசியம் காக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

மகளிர் போலீஸார்
மேலும் சில அதிகாரிகளின் போன் எண்களையும் கொடுத்துள்ளது. அதில் துணை காவல் கண்காணிப்பாளர் பவானி- 978929999, காவல் ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல் நிலையம்- 9486294580, காவல் உதவி ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், பவானி- 9498190609. இந்த எண்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை மகளிர் போலீஸார் கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம்
எனவே இந்த எண்களை வைத்துக் கொண்டு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு பெண் போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவுக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications