ராகுல்-டிகே சிவக்குமார் சந்திப்பு.. காரணம் இதுதான்.. கர்நாடகாவில் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்!
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியுடன், கர்நாடகா மாநில தலைவர் டிகே சிவக்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று முதல்வர் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சற்று முன்னதாக சித்தராமையா, ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்ட நிலையில் டிகே சிவக்குமார் சந்திப்பு நடந்து வருகிறது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இருவரும் தங்களது உழைப்பு பற்றிய விஷயங்களை எடுத்து கூறியும், எதற்காக தனக்கு முதல்வர் வழங்க வேண்டும் என்பது பற்றியும் கட்சி மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று சித்தராமையா ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து டிகே சிவக்குமார் ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார். கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது.
இதனால் இந்த சந்திப்பு என்பது டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் தான் இருக்கும் எனவும், அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இருக்கும் என்பதையும் ராகுல் காந்தி கூறலாம் என கூறப்படுகிறது. மேலும் துணை முதல்வர் பதவியோடு முக்கிய துறையை கையாள வேண்டும் என டிகே சிவக்குமாருக்கு ராகுல் காந்தி அறிவுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications