"பென் டிரைவ்" தந்த மேனகா.. அதைவிடுங்க.. யாரந்த "40 தம்பிகள்".. கடைசி நேரத்திலும் டென்ஷன் போல.. !

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் அலுவலரிடம் புகாருக்கு விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நாளையுடன் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்வடையும் நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.. இந்த கடைசிகட்ட நேரத்திலும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொகுதியை வலம்வந்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறார்கள் சீமான் கட்சியினர்..!!

இந்த முறை இடைத்தேர்தலில் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் மற்றும் பாஜகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெறுவதில் நாம் தமிழர் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது..

மேலும், சிறுபான்மையினர் வாக்குகளை சீமான் பெற முயல்வதுடன், பாஜக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, அதிமுக பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கே அறுவடை செய்யும் முயற்சியாகவும் சீமானின் பிரச்சார பேச்சுக்கள் பார்க்கப்பட்டு வருகின்றன..

 டாப்2 சீமான்

டாப்2 சீமான்

சீமான் நினைத்தால், இந்த இடைத்தேர்தலில் 3ம் இடத்தில் இருந்து, 2ம் இடத்தைகூட எட்டிப்பிடித்துவிட முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லும் அளவுக்கு பிரச்சாரம் வீர்யம் நிறைந்ததாகவே காணப்பட்டது. ஆனால், திடீரென அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை கிளம்பிவிட்டது... இது அக்கட்சிக்கு மிகப்பெரிய மைனஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. ஏற்கனவே திமுகவுடன் மோதலாகி, மண்டை உடைந்து, சலசலப்புகள் கிளம்பிய நிலையில், இந்த சர்ச்சை பேச்சும் சீமானுக்கு எதிராக கடைசிகட்ட பிரச்சார நேரத்தில் சேர்ந்து கொண்டது,

 சீறும் சீமான்

சீறும் சீமான்

சீமான் அப்போது பேசும்போது, "விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான். அதே போல், கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 மேனகா பளீர்

மேனகா பளீர்

அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள் என்று சீமான் பேசியிருந்தார். இதைகேட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அருந்ததியினர் அமைப்பினரும் போராட்டத்தை கையில் எடுத்தனர்.. மேலும், அருந்ததியினர் சமுதாயத்தைச் மக்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் புகார் அளித்தனர்.

 பென் டிரைவ்

பென் டிரைவ்

இதையடுத்து, சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படியே, வேட்பாளர் மேனகா நவநீதன் நேரில் ஆஜராகி விளக்கமும் தந்தார்.. அதில், அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசவில்லை... வரலாற்று தொடர்பான கருத்துகளையே சீமான் பிரச்சாரத்தின்போது பேசினார். சீமான் பேசிய கருத்துக்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்று விளக்கம் தந்தார்.

 பென்டிரைவ்

பென்டிரைவ்

அத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் பிரச்சார கூட்டம் குறித்த விபரங்கள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒன்றை நேரில் அளித்தார் மேனகா.. இந்த பென்டிரைவை பெற்றுக்கொண்ட சிவக்குமார், இதுகுறித்து சொல்லும்போது, சீமான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து, விளக்கம் கேட்டு அக்கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அக்கட்சியின் வேட்பாளர், அந்த நிகழ்ச்சி குறித்த பதிவுகள் கொண்ட, 'பென் டிரைவ்' ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறியுள்ளார்..

 40 தம்பிகள்

40 தம்பிகள்

இதனிடையே, இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளநிலையில், ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரச்சாரத்துக்கு அனுமதி வாங்கினீர்களா? என்று கேட்டனர். மேலும், பிரச்சாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்..

 பர்மிஷன் ஓகே

பர்மிஷன் ஓகே

அதில், "நாங்கள் அனுமதி பெற்று தான் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று சொல்லி அழைத்து சென்றுவிட்டனர். அதனால், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி, இனிமேல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள்... அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.. இதையடுத்து, வழக்கம்போல், சாலை வசதி, குடிநீர் வசதி, டாஸ்மாக் அகற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுத்து, எளிமையாக ஓட்டுக்களை கேட்டு வருகிறார்கள் சீமானின் தம்பிகள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+