ஓ.. "அப்டியா அப்டியா".. பென்டிரைவ் தந்த மேனகா.. நொந்துபோய் சொன்ன அந்த "வார்த்தை".. கவனிக்கும் திமுக
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, செய்தியாளர்களிடம் அதிருப்தியையும் வேதனையையும் பகிர்ந்துள்ளார்
ஈரோடு: "திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழாவையெல்லாம் நடத்துவார்கள்.. தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு பாராட்டு விழாவையும் கொண்டாடுங்கள்.. ஏன் என்றால், அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை" என்று நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய மேனகா விமர்சித்தள்ளார்.
இந்த முறை இடைத்தேர்தலில் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் மற்றும் பாஜகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெறுவதில் நாம் தமிழர் கட்சி ஆர்வம் காட்டியது..
சிறுபான்மையினர் வாக்குகளை சீமான் பெற முயல்வதுடன், பாஜக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, அதிமுக பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கே அறுவடை செய்யும் முயற்சியாகவும் சீமானின் பிரச்சார பேச்சுக்கள் பார்க்கப்பட்டன.

மேனகா
சீமான் நினைத்தால், இந்த இடைத்தேர்தலில் 3ம் இடத்தில் இருந்து, 2ம் இடத்தைகூட எட்டிப்பிடித்துவிட முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லும் அளவுக்கு பிரச்சாரம் வீர்யம் நிறைந்ததாகவே காணப்பட்டது. ஆனால், திடீரென அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை கிளம்பிவிட்டது... இது அக்கட்சிக்கு மிகப்பெரிய மைனஸாகவும் பார்க்கப்பட்டது.. ஏற்கனவே திமுகவுடன் மோதலாகி, மண்டை உடைந்து, சலசலப்புகள் கிளம்பிய நிலையில், இந்த சர்ச்சை பேச்சும் சீமானுக்கு எதிராக கடைசிகட்ட பிரச்சார நேரத்தில் சேர்ந்து கொண்டது... இது நிச்சயம் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்றும் கருதப்பட்டது. அதன்படியே நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது..

காலி டெபாசிட்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்றிருந்தார்.. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெறாத வேட்பாளர் டெபாசிட்டை இழப்பார்கள்.. அந்தவகையில் 10804 வாக்குகளை மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. கடந்த தேர்தலில் இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 11629 வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இம்முறை 825 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது... அருந்ததியர் சமூகத்தை பற்றி பேசியது அச்சமூக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததே, அக்கட்சி டெபாசிட்டை கூட பெற முடியாத அளவிற்கு தோற்க காரணமாக அமைந்துவிட்டதாக கருதப்படுகிறது..

கஷ்டப்படறாங்க
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. "மக்களின் வறுமையை மூலதனமாக பயன்படுத்துகிறது திமுக. ரூ.400 கோடி செலவு செய்திருக்காங்க.. நாளை ரூ.4000 கோடி கொள்ளையடிக்கப் போறாங்க.. 39 லட்சம் மட்டும் செலவு செய்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். மக்களுக்கு கொடுத்த ரூ.20,000 பணமெல்லாம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது.. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் யாருமே வேலைக்கும் போகவில்லை..

அப்படியா அப்படியா
இனிமேல்தான் அவங்களுக்கு கஷ்டப்படுவாங்க.. அதனால், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு இப்பவே கொடுத்துவிடுங்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழாவையெல்லாம் நடத்துவார்கள். அதுகூடவே, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் கொண்டாடுங்கள்.. ஏன் என்றால், அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை. ஒவ்வொரு முறையும் புகார் அளித்தும் அப்படியா? அப்படியா? என்று கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு நிச்சயமாக பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும்" என மேனகா நவநீதன் ஆவேசமாக கூறியுள்ளார்..

பென்டிரைவ்
இந்த அதிருப்திக்கும், வேதனை பேச்சுக்கும் காரணம், வேட்பாளர் மேனகா, தேர்தல் அதிகாரியை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து பல புகார் மனுக்களை தந்திருந்தார்.. அதுமட்டுமல்லாமல், அருந்ததியர் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு சர்ச்சைாகவும், அதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படியே, வேட்பாளர் மேனகா நவநீதன் நேரில் ஆஜராகி விளக்கமும் தந்தார்.. அதில், அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசவில்லை என்றார்.

பென்டிரைவ்
வரலாற்று தொடர்பான கருத்துகளையே சீமான் பிரச்சாரத்தின்போது பேசினார். சீமான் பேசிய கருத்துக்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்று விளக்கம் தந்தார். அத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் பிரச்சார கூட்டம் குறித்த விபரங்கள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒன்றை நேரில் அளித்தார் மேனகா.. அவர் அளித்த பென்டிரைவ் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவக்குமாரும் உறுதி தந்திருந்தார்.. இப்படியாக நாம் தமிழர் கட்சிக்கு தொகுதியில் நாளுக்குநாள் ஏதாவது ஒரு ரூபத்தில், டென்ஷன் எகிறி கொண்டேயிருந்தது.. கடைசிநாள் பிரச்சார தினத்தன்றுகூட, நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சீமான் தம்பிகள்
இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மறுபடியும் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.. இப்படி நிறைய புகார்களை அடுத்தடுத்து தந்தும்கூட, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வேதனையைதான், மேகனா தற்போது செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் படுதோல்வி, அக்கட்சியிருக்கு அதிர்ச்சியை தந்துவருகிறது.. சீமானுக்கு ஆகச்சிறந்த பலமே அவரது பேச்சுதான்.. அந்த பலமே இந்த தேர்தலில் சறுக்கலுக்கு காரணமாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications