வண்டியை ஓட்டும்போதே நெஞ்சுவலியால் இறந்த டிரைவர்: விடிய விடிய ஓடிய லாரி என்ஜின்
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த மினி லாரி டிரைவர் வண்டியை ஓட்டும்போதே நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள உத்தண்டி கிராமம் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன்(48). மினி லாரி டிரைவர். அவரது மனைவி கீதா. அவர்களுக்கு குழந்தை இல்லை.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மினி லாரியில் பிளாஸ்டிக் சீட்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்பினார். சனிக்கிழமை இரவு விராச்சிபாளையம்
அருகே செல்கையில் அவருக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாரியை சாலையோரமாக கொண்டு சென்றார்.
அவரால் வண்டியின் என்ஜினை ஆஃப் செய்ய முடியவில்லை. அதனால் பிரேக்கை காலால் அழுத்தியபடி இருந்த அவரின் உயிர் பிரிந்துவிட்டது. இரவு முழுவதும் என்ஜின் ஆஃப் ஆகாமல் ஓடிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் பொதுமக்கள் லாரியை பார்த்து சந்தேகமடைந்து மாரப்பனை எழுப்பினர். அப்பொழுது அவர் இறந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து மாரப்பனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications