Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் பையன் இறப்புக்கு காரணம் மருமகள் தான்.. ராகுல் டிக்கியின் தாய் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இன்ஸ்டா பிரபலமான ராகுல் டிக்கியின் இறப்புக்கு தனது மருமகள் தான் முழு காரணம் என்று ராகுல் டிக்கியின் தாய் சாயிதா பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ராகுல் டிக்கி. இன்ஸ்டாகிராம், யூடியுபிலும் வீடியோக்கள் போட தொடங்கினார். ராகுல் டிக்கியை 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். காமெடியான வீடியோக்களை போட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாலை விபத்தில் ராகுல் டிக்கி உயிரிழந்ததாக வெளியாகிய செய்திகள் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

rahul tiky erode

இந்நிலையில், ராகுல் டிக்கியை அவருடைய தாய் குடிப் பழக்கத்துக்கு ஆளாக்கியதாகவும், தன்னை டார்ச்சர் செய்ததாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே ராகுல் டிக்கியின் தாய் சாயிதா செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் பையனை தங்கம் மாதிரி வளர்த்து வந்தேன். என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவர் ஆசைப்பட்டவரை தான் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முழு விவரம் தெரிந்து தான் அவருடைய மனைவி திருமணம் செய்து கொண்டார்.

நாங்கள் ராகுலின் மனைவியை ஏமாற்றவில்லை. என் பிள்ளையைப்போல தான் அந்த பெண்ணையும் பார்த்தேன். மாமியார் டார்ச்சர், மாமனார் நல்லவர் என்று கூறியிருக்கிறார். என் கணவர் என்னுடன் இல்லை. வேறு பக்கம் இருக்கிறார். பையனுக்காகத்தான் இப்போது வந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

சிறிது நாட்களுக்கு முன் என் மகன் தனது மனைவியுடன் வேறு பகுதியில் வீடு எடுத்து இருப்பதாக கூறினார். என் பையன் மேல் சத்தியமா நான் சொல்வதெல்லாம் உண்மை. என் பையன் மீண்டு வரப்போவதில்லை. அவன் இறந்தது பெரிய இழப்பு. என் மகனின் இறப்புக்கு எனது மருமகளே காரணம். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

என் அம்மாவின் மீதே கைவைத்துவிட்டார் அதனால் ராகுலுடன் வாழ மாட்டேன் என்று மருமகள் கூறினார். இங்கு வந்துவிடுங்கள் பேசிக் கொள்ளலாம் என்றுதான் கூறினேன். நான் அவர்களைத் துரத்திவிடவில்லை. அவர்களே வீட்டை விட்டுச் சென்றார்கள். வீட்டில் வைத்திருந்த விருது, ஏசி முதற்கொண்டு அவருடைய பொருள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். எனக்கு யாரும் இல்லை. என் பையனின் மோதிரமும், விருதுகளும், அவனுடைய போட்டோக்களையும் காவல் துறையினர் மீட்டு தர வேண்டும்.

எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை. என் மகனுக்கு இது இரண்டாவது திருமணம் என அனைத்தும் என் மருமகளுக்கு தெரியும். என் அம்மாவிடம் நான் கூற மாட்டேன். எனக்கு ராகுல் மட்டும் போதும் என்று கூறிதான் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தனர். என் மகனுக்கு வருமானம் குறைந்ததால் நிறைய கடன், நகை அடகு வைத்து கொடுத்துள்ளேன். என்னுடைய செயின், பைக், மோதிரம், மகனின் துணி என அனைத்தும் எனக்கு வேண்டாம்.

என் மகனைவிட என் மருமகளுக்குத்தான் அதிகம் சப்போர்ட் செய்தேன். எங்களிடம் எந்தவிதமான சொத்தும் இல்லை. தனியாக சென்றதில் இருந்தே என்னிடம் பேச்சுவார்த்தையே இல்லை. மருமகளை எந்தவிதமான டார்ச்சரும் செய்யவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் மருமகள் அவருடைய அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு அவருடன் சென்றுள்ளார்.

அப்போது ராகுல் டிக்கி அவர்கள் செல்வதற்கு முன் சென்று மனைவியை கூப்பிடுவதற்காக வேகமாக பைக்கில் இவர்களை தாண்டி சென்றுள்ளார். இதுகுறித்து மருமகள் ராகுலின் அப்பாவுக்கு அழைத்து கூறியுள்ளார். அதற்குள் என் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். என் மகனை நானே குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால் இந்த அளவுக்கு அவர் வளர்ந்திருக்க முடியுமா. தேவையில்லாமல் என் மகனின் பெயரை மருமகள் கெடுக்கிறார் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+