ஈரோட்டில் தோழியை மணந்து இரு குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்ட தாய் உள்பட 5 பேர் கைது
ஈரோடு: ஈரோட்டில் மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட தாய், தந்தை உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

புஞ்சை புளியம்பட்டி சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (43). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ரஞ்சிதா (36).
இவர்களுக்கு தீபக் (15), கிஷாந்த் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களை இருவரையும் ரஞ்சிதாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நரபலி கொடுக்க திட்டமிட்டதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பாட்டி
இதைத் தொடர்ந்து தீபக், கிஷாந்த் தனது பாட்டி, தாத்தாவுடன் கடந்த 13-ஆம் தேதி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், எனது மருமகன் ராமலிங்கம். இந்துமதி (32) என்ற பெண்ணை கடந்த 6-ஆண்டுகளுக்கு முன்னர் எனது மகள் ரஞ்சிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

படிக்கவிடாமல்
3 பேரும் ஈரோடு ரங்கம்பாளையம் ரயில்வே நகரில் வசித்து வந்தனர். இவர்களுடன் இந்துமதிக்கு பழக்கமான தனலட்சுமி என்கிற சசியும் (39) வசித்து வந்தார். எனது மகள், மருமகன், இந்துமதி, தனலட்சுமி ஆகிய 4 பேரும் கூட்டு சேர்ந்து எனது பேரன் தீபக்கை படிக்கவிடாமல் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.

பள்ளியில் சேர்க்கவில்லை
இளைய பேரன் கிஷாந்திற்கு 6 வயதாகியும் இதுவரை பள்ளியில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரையும் வீட்டில் துணி துவைக்க வைத்தும், பாத்திரம் கழுவ வைத்தும், சரியாக செய்யவில்லை என்றால் அடித்தும் உடம்பில் சூடு போட்டும் மிளகாய் பொடி சாப்பாட்டை கொடுத்தும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

பூஜைகள்
எனது மகள் இரவு நேரத்தில் கடவுள் வேடம் அணிந்து கொண்டு பூஜைகளை செய்து வந்தார். எனது மகளும் சசியும் திருமணம் செய்து கொண்டதாக எனது பேரன்கள் கூறுகிறார்கள். இதையடுத்து எனது பேரன்களை பலி கொடுத்தால் கூடுதல் சக்தி கிடைக்கும் என இருவரும் பேசி கொண்டதை அடுத்து சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

பெருந்துறை
இதுகுறித்து நானும் எனது கணவரும் அவர்களிடம் முறையிட்ட போது குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறி விரட்டி விட்டனர் என மனுவில் கொடுத்திருந்தார். இதையடுத்து ஈரோடு பெருந்துறை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

மனைவிகள்
அப்போது ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்த போது இரு கார்களை சோதனை செய்தனர். அதில் இருந்த ராமலிங்கம், அவரது மனைவிகள் ரஞ்சிதா, இந்துமதி மற்றும் தனலட்சுமி என்கிற சசி (38), இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன் (42) ஆகியோரை கைது செய்து கார்களையும் பறிமுதல் செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications