திமுக ஆட்சியை கண்டித்து 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்.. மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.. அண்ணாமலை

திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திறனற்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கீனம் நிலை சந்தி சிரிக்கிறது. குற்றவாளிகளின் கரத்தில் இருக்க வேண்டிய விலங்குகள் காவல்துறையின் கைகளுக்கு போடப்பட்டு இருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு வழங்கி என்ன பயன்?

பாதுகாப்பு வழங்கி என்ன பயன்?

பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுக நிர்வாகியால் கொலை செய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார். பாஜக பட்டியல் இனப் பிரிவின் தலைவர் தடா. பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இது போன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமிக்க வேண்டி, காவல் உயர் அதிகாரியிடம், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ரூபாய்க்கு ஓட்டை வாங்கி விடலாம்..

ரூபாய்க்கு ஓட்டை வாங்கி விடலாம்..

தாக்குதலும், இழப்பும் நேரிட்ட பிறகு பாதுகாப்பு வழங்கி என்ன பயன்? மதுவினால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும், அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை லாபத்துக்காக, மக்களை மதுவுக்கு அடிமைகளாக, இந்த தி.மு.க அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசியிருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள், சரளமாகக் கிடைக்கின்றன. வயது வித்தியாசம் இன்றி சின்னஞ்சிறார்களும் அதை எளிதாகப் பெறமுடிகிறது. இந்த கேவலங்களுக்குப் பெயர்தான் திராவிட மாடலா... இலவசங்களுக்கும், இரண்டு, மூவாயிரம் ரூபாய்க்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், தி.மு.க ஆட்சியைக் கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியை கண்டித்து..

திமுக ஆட்சியை கண்டித்து..

இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. மேலும் திமுக அரசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அன்றைய தினம் (21 ஆம் தேதி) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை, மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

உண்ணாவிரத அறப்போராட்டம்

உண்ணாவிரத அறப்போராட்டம்

முன்னதாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக் கொன்ற திமுகவை கண்டித்து, 21-ந்தேதி காலை 9.30 மணிக்கு சிவானந்தா சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+