ராகுலை தொடகூட விடல! ஓரமாக நிக்கவச்சி அசிங்கப்படுத்திட்டாங்க! இன்ஸ்டா பிரபலத்தின் 2வது மனைவி கண்ணீர்
ஈரோடு: இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்குகளில்கூட அவரின் உடலை தொட குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என அவரின் 2வது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது, "ராகுல் முதலில் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தெரிய வந்தார். இன்ஸ்டாகிராமில் எனது நண்பராக இருந்தார். அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி உட்பட பல விஷயங்களை என்னுடன் ஷேர் செய்து வந்திருந்தார். நாங்கள் இப்படித்தான் தொடக்கத்தில் பழக ஆரம்பித்தோம்.

நாட்கள் செல்ல செல்ல அவர் அவருடைய அம்மாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் எங்களுக்கு காதல் மலர்ந்தது. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்திருந்தது என்பது எனக்கு தெரிந்தது. கோவையில் வசித்து வந்த பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடந்து, 6 மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து இருந்தார்கள். திருமணம் குறித்து வெளியில் விசாரித்த போது, ராகுலின் அம்மா கொடுத்த டார்ச்சர் காரணமாகத்தான் அப்பெண் பிரிந்து சென்று விட்டதாக தெரிய வந்தது.
ஆனால் இவையெல்லாம் எங்களுடைய வாழ்க்கையில் பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திருமணத்துக்கு பிறகு நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.
ராகுலின் வீட்டில் நாங்கள் ஓராண்டு மூன்று மாதங்கள் வரை வசித்து இருந்தோம். அதன் பிறகு அவருடைய அம்மா எங்களை வேறு இடத்திற்கு சென்று விடுமாறு கூறினார்கள். நாங்களும் வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்று விட்டோம்.
இதற்கிடையில் ராகுலுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டிருந்தது. இதற்கு காரணம் அவருடைய அம்மாதான். ராகுலுக்கு கிடைக்கும் வருமானம் அவரை குடிக்க தூண்டியிருந்தது. இதை ஊக்குவித்தது அவருடைய அம்மாதான். இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போதுதான் எனக்கும் அவருடைய அம்மாவுக்கும் முதல் முதலில் சண்டை வந்தது.
அதன் பிறகு ராகுல் குடிப்பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகி விட்டார். குடித்துவிட்டு வந்து அவர் அம்மாவிடமும் என்னிடமும் சண்டையிட்டு, இருவரையும் போட்டு அடித்தார். இருப்பினும் இந்த கொடுமைகளை சமாளித்துக் கொண்டு நான் அவருடன் வாழ்ந்து வந்திருந்தேன்.

குடிப்பழக்கம் அதிகமானதால், அவர் தன்னையே குறை சொல்லிக் கொள்வது, அதிகமாக வருந்துவது என பவ பிரச்சனைகளை எதிர் கொண்டார். இருப்பினும் நாங்கள் தனியாக வந்த பிறகு அவருக்கு நான்தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. வருமானத்திற்காக நாங்கள் அடுத்த கட்ட முயற்சியை எடுத்திருந்தோம். வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த துயர சம்பவம் நடந்தது.
அவரது வீட்டில் அவருடைய அப்பா எனக்கு முழு சப்போர்ட். என்னுடைய கோரிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அவருடைய தந்தை மதிப்பு கொடுத்து வந்திருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய அப்பாவும் அம்மாவும், ராகுலை நான் நன்றாக பார்த்துக் கொள்வதாக பெருமைபட்டு இருந்தனர். என்னை விட்டால் அவரை வேறு யாரும் இவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்று கூட சொன்னார்கள்.
ஆனால் அவரது இறப்புக்கு என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இறுதிச் சடங்கில் கூட அவரை தொடவிடவில்லை. ஒரு ஓரமாக நிற்க வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications