பொறுக்கியாக ஊரை சுற்றும் பரதேசி சீமான் என்று பெயர் வைத்து கொள்வான் - ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை
ஈரோடு: பொறுக்கியாக ஊரை சுற்றும் பரதேசி சீமான் என்று பெயர் வைத்து கொள்வான் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் ஈரோடு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஈரோடு லோக்சபா தேர்தலில் திமுகவே நேரடியாக போட்டியிடுகிறது.

ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் கார்மேகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து நேற்று ஈரோட்டில் பிரசாரம் நடந்தது. திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனும் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அதாவது ஈவிகேஎஸ் இளங்கோவன், ‛‛இந்த ஊரிலேயே பார்த்து கொண்டால் பெயருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்வையில்லாத ஒருவன் கண்ணாயிரம் என பெயர் வைத்து கொள்வான். பொறுக்கியாக ஊரை சுற்றி பரதேசியாக இருப்பவன் சீமான் என வைத்து கொள்வான். ஆக, பெயர் வைத்து கொள்வது என்பது அவனவன் இஷ்டத்துக்கு, குணத்துக்கும் நேர்மாறாக பெயரை வைத்து கொள்வார்கள்'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் இத்தகைய தகவலை அவர் பேசியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications