விஜயலட்சுமி புகாரா.. கேவலமாக இருக்கு தம்பி.. கடந்து போக நினைக்கிறேன்! சீமான் சொன்ன பதில் இதுதான்!
ஈரோடு: நடிகை விஜயலட்சுமி குறித்து திரும்ப திரும்ப பேசுவது கேவலமாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இவர் பிரென்ட்ஸ் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர். கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த படத்திற்கு பிறகு நடிகை விஜயலட்சுமி சில படங்களில் நடித்துள்ளார்.

வாழ்த்துகள் படத்தில் நடித்த போது தன்னுடன் சீமானுக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்படும்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விஜயலட்சுமியை அவதூறாக கெட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சியினர் பேசுவதும் அதற்கு விஜயலட்சுமி பதிலடி கொடுப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்றைய தினம் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாக ஏமாற்றியதாகவும் அவர் தன் புகாரில் கூறியிருந்தார். இதனால் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்த போது கண்ணீர் விட்டார். அவரை அருகில் இருந்த வீரலட்சுமி தேற்றினார்.
பின்னர் சீமானை கைது செய்யும் வரை நாங்கள் போராடுவோம் என கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து சீமானிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்ட போது ஆமா அவர் திரும்ப திரும்ப என் மீது புகார் கொடுத்து வருகிறார். இதுதான் நீங்கள் கேட்ட கேள்வி பதிலாக இருக்கும் என்றார்.
எந்த கேள்வியாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கும் சீமான் விஜயலட்சுமி குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதிலளித்து வருகிறார். இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போதும் சீமானிடம் விஜயலட்சுமி குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு அவர் கூறுகையில் அமைதியாக கடந்து போக வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதை பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது என்றார். 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுகவினர் அவர்கள் நிறைவேற்றிய 8 சதவீத வாக்குறுதிகளையாவது காட்டுவார்களா, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் எதற்கு கூட்டணி என கேள்வி எழுப்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications