ஈரோடு குலுங்க குலுங்க.. விஜய்க்காக பக்கா பிளானோடு களமிறங்கிய செங்கோட்டையன்.. தவெகவினர் செம குஷி
ஈரோடு: தவெக மூலம் தமிழ்நாடு அரசியலில் புது பாய்ச்சலுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு சைலன்ட் மோடிற்கு சென்றார். கடந்த வாரம் புதுச்சேரி கூட்டத்தில் கலந்து கொண்டாலும், கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் விஜய் பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. கொங்கு மண்டலத்தில் விட்ட பெயரை, அதே கொங்கு மண்டலத்தில் சரி செய்ய விஜய் வருகிற 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். அரசியலில் அனுபவமிக்க செங்கோட்டையன் இதற்கான பணிகளை பக்காவாக வகுத்துள்ளார். விஜய் கூட்டத்தின் திட்டம் குறித்து செங்கோட்டையன் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தங்களின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் பலத்த வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன. கூடவே நாம் தமிழர், தவெக கட்சிகளும் மல்லுகட்டுவதால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

விஜய் ஈரோடு விசிட்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வரவுள்ளார். விஜயமங்கலம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விஜய் பேசுகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் விஜய் திறந்தவெளி பொதுக் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக சார்பில் விஜயமங்கலம் டோல்கேட் அருகே மக்களின் நாயகன், தமிழ்நாடு ஆட்சி பீடத்தில் அமரவுள்ள விஜய் வருகிற 18 ஆம் தேதி காலை 11- மதியம் 1 மணிக்குள் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். காவல்துறையின் விதிமுறைக்கு ஏற்ப கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
செங்கோட்டையன் பக்கா பிளான்
எல்லோரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் மனிதநேயத்தோடு அவர்களின் விதிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய நிகழ்ச்சி ஒரு வரலாறு படைக்கின்ற அளவுக்கு அமைந்திட வேண்டும். எல்லா விதிகளுக்குட்பட்டு செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வோம். குடிநீர், பாதுகாப்பு அரண், கழிவறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும்.
இதுவரை தமிழகத்தில் காணாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் அளவுக்கு தலைவருக்கு வரவேற்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இனி முன் உதாரணமாக அமையுமளவுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை செய்கிறோம். இது பெரியார் மண். இதற்கென்று ஒரு பெருமை உள்ளது. புதுச்சேரி பொதுக் கூட்டத்திற்கு அனைவரின் பாராட்டை பெறுமளவுக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
களத்தில் தொண்டர் படை
மக்கள் தலைவரை வரலாறு காணாதளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் தொண்டர் படையைச் சேர்ந்த 1,000க்கும் மேற்ப்ட்டோர் சீருடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். காவல்துறையின் தேவைக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். தொண்டர்கள் பேனர்களில் ஏராதளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கென்று டோக்கன், பாஸ் எதுவுமில்லை. விஜய் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஈரோடு கூட்டத்திற்கு நேரடியாக வருகிறார்.
காவல்துறையின் கட்டுப்பாட்டை பின்பற்றி அவர்கள் குறித்த நேரத்தில் கூட்டம் நடத்தப்படும். சென்னை விமான நிலையத்தில் டேக் ஆஃப், கோவை விமான நிலையத்தில் லேண்டிங் நேரமும் அதற்கேற்ப சரியாக அமைந்துவிட்டால் புதுச்சேரியை போல நேர மேலாண்மையில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவம் உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை." என்றார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது?












Click it and Unblock the Notifications