அம்மாடி! என்ன இது? தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சாரைசாரையாக.. பார்த்ததும் அதிர்ந்த மக்கள்! குழப்பம்
இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு: கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பரந்து விரிந்த காட்டு பகுதி உள்ளது. பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, பெரிய கொடிவேரி போன்ற அணைகள், நீர் நிலைகள் எல்லாமே இந்த சத்தியமங்கலத்திற்கு கீழ்தான் வருகிறது.
இது மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும். இதனால் யானைகள் நடமாட்டம், புலிகள் நடமாட்டம் அதிகம் இந்த பகுதிகள் காணப்படுகிறது. முக்கியமாக யானைகள் இங்கே கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. தமிழ்நாட்டில் யானைகள் அதிகம் உள்ள காடுகளில் இதுவும் ஒன்றாகும்.

காட்டு விலங்குகள்
மற்ற பல காட்டு விலங்குகளின் நடமாட்டமும் இங்கே காணப்படுவது உண்டு. தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ளது. இங்கே இருக்கும் 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் நூற்றுக்கணக்கில் யானைகளும் உள்ளன. இது போக சிறுத்தை, காட்டு எருமை, மான், செந்நாய், நரி, கரடி போன்ற உயிரினங்களும் இங்கேகாணப்படுகிறது. புலிகள் மட்டும் இங்கே 25 என்ற எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புலிகள்
இந்த நிலையில்தான் திடீரென கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்து உள்ளனர். அதன்படி கர்நாடகாவின் காட்டுப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் தமிழ்நாடு காட்டு பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. 30- 40 என்ற எண்ணிக்கையில் சாரைசாரையாக தமிழ்நாடு நோக்கி வர தொடங்கி உள்ளன. இதுதான் அப்பகுதி மக்களை ஆச்சர்யம் அடைய வைத்து உள்ளது.

வியப்பு
அவ்வப்போது கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டு பகுதிக்கு இவை வருவது வழக்கம்தான்.ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் இடப்பெயர்வு நடந்து உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் யானைகள் இடம்மாறி உள்ளன. அருளவாடி பகுதி வழியாக இவை காட்டுக்குள் செல்கின்றன. அது மக்கள் வசிக்கும் பகுதி ஆகும். அங்கு ஆயிரக்கணக்கில் மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இங்கே விவசாய நிலங்களும் உள்ளன. இந்த பகுதிகள் வழியாகவே யானைகள் காட்டுக்குள் சென்று கொண்டு இருக்கின்றன. இதுதான் அங்கே விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் அதிர்ச்சி
இப்படி திடீரென தமிழ்நாடு நோக்கி வரும் இந்த காட்டுயானைகளால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். ஏன் இத்தனை வருகிறது என்று தெரியவில்லை. காட்டு பாதையில் செல்லாமல் அவை மக்கள் செல்லும் பாதையிலும் வருகிறது. இடையே விவசாய பகுதிகளுக்கு வந்து ஓய்வு எடுக்கிறது. சில விவசாய இடங்களில் அவைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் பதற்றமாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வனத்துறையினருக்கும் புகார் அளித்தனர். வனத்துறையினர் இந்த பகுதிகளில் சோதனை செய்துவிட்டு, யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் துரத்தி விட்டனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications