சத்தியமங்கலத்தில் தாய் யானை இறந்ததால் தவித்த 2 மாத குட்டி! "தத்து" தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை!
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயுடன் பாச போராட்டம் நடத்திய குட்டி பெண் யானை என்னவானது என்பது குறித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வயோதிகம் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தாய் யானை இன்று உயிரிழந்தது. இந்த நிலையில் அதனுடன் பாச போராட்டம் நடத்திய குட்டி யானை என்னவானது என்பது குறித்தும் காடுகளில் உள்ள விலங்குகளின் வாழ்க்கை போராட்டம் குறித்தும் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் வெளியிட்ட நீளமான பதிவில் கூறியிருப்பதாவது: மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழியை நீங்கள் நம்புகிறீர்களா? நான் சொல்ல போகும் ஒரு கதை உண்மைக் கதை, அதில் காட்டு விலங்குகளின் வாழ்க்கையே போராட்டம், சோகங்கள், வெற்றி உள்ளிட்டவை நிறைந்திருக்கும்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அருகே ஒரு பெண் யானை தனது இரு குட்டிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பெண் யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அதனுடன் பிறந்த இரு மாதங்களே ஆன பெண் யானையும் டீன் ஏஜ் பருவத்தை அடையவிருக்கும் ஆண் குட்டி யானையும் வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த தாய் யானை நடக்க முடியாமல் அந்த இடத்திலேயே படுத்துவிட்டது. இதை தமிழக வனத்துறையினர் கண்டனர். உடனே கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரை வரவழைத்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போதுதான் அந்த யானையால் நடக்க முடியவில்லை என்றும் அதன் கூட்டத்திலிருந்து பிரிந்து விட்டதாகவும் தெரியவந்தது.
தாய் யானை பாதி வழியிலேயே படுத்துவிட்டதை பார்த்த இரு குட்டி யானைகளும் அதிர்ச்சி அடைந்தனர். அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கின. உடனே அந்த ஆண் குட்டி யானையை உடனே அதன் கூட்டத்திற்கே அனுப்பி வைத்தனர். அந்த குட்டி ஆண் யானை நீர்ச் சத்துடன் , பாதுகாப்பான சூழலில் மனித நடமாட்டங்கள் குறைந்த பகுதியில் நடமாடுவதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த நடவடிக்கைகள் வனத் துறையின் வழிகாட்டும் நெறிமுறைகளின்படி நடந்தது.
இதையடுத்து அந்த தாய் யானை பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்த கால்நடை மருத்துவர்கள், அடுத்த நாள் காலை அதாவது 4ஆம் தேதி அந்த பெண் யானையையும் அதன் கூட்டத்துடனும் ஏற்கெனவே கூட்டத்திற்கு சென்ற குட்டி ஆண் யானையுடனும் (அண்ணன்) சேர்க்க முயற்சிகளை செய்தனர். யானைகள் முகாமில் குட்டியை பிடித்து வைத்திருக்கும் எளிய ஆப்ஷனை விட்டுவிட்டு அந்த யானை கூட்டத்துடன் கூட்டமாக செல்வதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்தோம்.

இதற்காக ஆனைமலை, முதுமலையைச் சேர்ந்த முன்கள பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் உள்ளிட்டோரின் உதவியை நாடினோம். இதையடுத்து இரவு 8 மணிக்கு டிரோன் கேமரா மற்றும் இரவு நேர கேமரா மூலம் அந்த யானை கூட்டம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்தோம். உடனே அந்த பெண் யானையை வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து சென்ற அதிகாரிகள் அதை அதே யானைகள் கூட்டத்துடன் கொண்டு போய் விட்டனர்.
உடனே அந்த கூட்டத்தில் இருந்த மூத்த பெண் யானை அந்த குட்டி யானையை அரவணைத்துக் கொண்டது. அந்த யானை அந்த குட்டிக்கு பால் கொடுப்பதையும் அதற்கு தாய் இல்லாத குறையே தெரியாத அளவுக்கு கவனித்துக் கொள்வதையும் பார்த்தவுடன் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். எதிர்பார்த்தபடியே அந்த கூட்டத்தின் மற்ற யானைகளும் அந்த புதிய குட்டியை பாசமாக அரவணைத்தது.
Long message Warning ⚠️
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 5, 2024
It is a long message but worth reading if you believe in 'Where there is a will, there is a way'. This is also a true story of struggles of life in the wild and triumph over sadness. On the evening of 3rd March in Sathyamangalam Tiger Reserve near… pic.twitter.com/VwvcQWsFB7
இதையடுத்து அந்த யானை குட்டியுடனேயே ஒருங்கிணைந்து விட்டதா என்பதை அறிய வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர். அப்போது 5ஆம் தேதியான இன்று காலை அந்த குட்டியானை தன்னை அரவணைத்த பெண் யானையுடன் காலை 9.30 மணிக்கு சாலையை கடந்ததை பார்த்தனர். குட்டியை அதன் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
பொதுவாக யானைகள் ஒன்றுக் கொன்று பிணைப்புடன் இருப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். குட்டியை அதன் கூட்டத்துடனும் அதன் அண்ணனுடனும் சேர்த்து வைத்த வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். அது போல் அதற்கு உறுதுணையாக இருந்த பாகன்களுக்கும் பாராட்டுகள். இவ்வாறு சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications