இப்படி பண்றீங்களேம்மா.. மதுரவாயலை தொடர்ந்து ஈரோட்டிலும் கள்ள ஓட்டு.. வாக்காளர் பரபர புகார்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி குமலன்குட்டை வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற வாக்காளர், ஏற்கனவே தன்னுடைய வாக்கு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலரிடம் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை அதிகளவிலான வாக்குகள் பதிவாகி வருகின்றன. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கள்ள ஓட்டு புகார்
மதுரவாயலை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியிலும் தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக வாக்காளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி குமலன்குட்டை வாக்குச் சாவடியில் தனது வாக்கு ஏற்கெனவே போடப்பட்டுள்ளதாக தினேஷ் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு தினேஷ் என்பவர் இன்று காலை வாக்கு செலுத்துவதற்காக வந்துள்ளார். அப்போது, இவருடைய வாக்கை வேறு யாரோ செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த தினேஷ், உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார்.
வாக்கு செலுத்தலாம்
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர் அர்பித் ஜெயின் அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்ததையடுத்து, தினேஷை 49 ஓ விதிப்படி வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கள்ள ஓட்டு சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தினேஷ் தெரிவித்தார். மதுரவாயலைத் தொடர்ந்து ஈரோட்டிலும் கள்ள ஓட்டு செலுத்தப்பட்டுள்ள சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications