50000 + 50000.. ஈரோட்டில் தவெக முன்னெடுத்த சூப்பர் விஷயம்.. விஜய்க்கு அனுமதி கிடைத்தது எப்படி?
ஈரோடு: ஈரோடு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் வரும் 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேச வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. அதன்படி கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் தவெகவினர் உறுதி அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு விஜய் இரண்டு மாதங்களாக அமைதியாக இருந்தார். அதன்பிறகு அண்மையில் தான் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் இன்னும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாடலை தவெக கூட்டத்திற்கு கொண்டுவர தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டு வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த பின்னர், அவரது பலத்தை காட்டும் விதமாக ஈரோட்டில் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வருகிற 18-ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம், த.வெ.க.வினர் மனு கொடுத்தனர்.
இதையடுத்து கடந்த நவம்பர் 12-ந் தேதி விஜயபுரி அம்மன் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி கோவில் இடத்தில் த.வெ.க. உள்பட எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் மாவட்ட போலீஸ் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனால் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் சிக்கல் எழுந்தது.
இந்தநிலையில் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜாதா, அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் தனலட்சுமி கூறுகையில், 'த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய வைப்புத்தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தோம். இந்த தொகையை செலுத்தியதாலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை சுத்தம் செய்து தருவதாக கூறியுள்ளனர்' என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதனால் வருகிற நவம்பர் 18-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் ஈரோட்டில் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications
