ஈரோடு தொழில் அதிபரை வீழ்த்திய பெண்.. ஒரே நாளில் ரூ.33 லட்சம் சம்பாத்தியம்.. இப்படியும் நடக்கலாம்
ஈரோடு: ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரான 45 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 9-ந்தேதி சமூக வலைதளம் மூலம் நடுத்தர வயது பெண் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார். அந்த பெண் தினமும் தொழில் அதிபருக்கு எஸ்எஸ்ம்எஸ் அனுப்புவது, வாட்ஸ்அப்பில் உரையாடுவதாக இருந்தார். நெருக்கமாக பேசி வந்த நிலையில், தொழில் அததிபரை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறி 33 லட்சத்தை பறித்துள்ளார்.
இன்றைக்கு சற்று சபலப்பட்டால், நிறைய பணத்தை இழந்துவிடுவார்கள். இன்று ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த பெண்ணையும் எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்கிற அளவில் உள்ளது. பெண்ணை காட்டி பணம் பறிப்பது என்பது பல காலமாக இருக்கிறது. இந்த சூழலில் பெண்களின் ஆசை வார்த்தையில் பணத்தை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரான 45 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நடந்த ஏமாற்றம் பற்றி பார்ப்போம். கடந்த டிசம்பர் மாதம் 9-ந்தேதி சமூக வலைதளம் மூலம் நடுத்தர வயது பெண் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார். அந்த பெண்ணும், தொழில் அதிபரும் தினந்தோறும் பேஸ்புக்கில் குறுஞ்செய்தி மூலம் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது 'வாட்ஸ்-அப்' எண்ணை பகிர்ந்து கொண்டு நெருக்கமாக பேசி வந்திருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த பெண், 'பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும், தானும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி உள்ளதாகவும் தொழில் அதிபரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அந்த பெண் அதற்காக தானும் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மையென நம்பி அவரது பேச்சில் மயங்கிவிட்டார் தொழில் அதிபர், அந்த பெண் அனுப்பிய 'லிங்க்'கில் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முதலில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.
இதையடுத்து ஈரோடு தொழில் அதிபர், அந்த செயலியில் பார்த்தபோது ரூ.1 லட்சத்துக்கு ரூ.25 ஆயிரம் லாபம் காட்டியிருக்கிறது. இதனால் அதிக லாபம் ஈட்டும் ஆசையில் கடந்த மாதம் 31-ந்தேதி வரை ரூ.33 லட்சம் வரை அவர் முதலீடு செய்திருக்கிறார். இதற்கு அந்த செயலியில் ரூ.60 லட்சம் இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறது. இந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, அந்த செயலியில் எடுக்க முடியவில்லை.
மாறாக அந்த செயலியும் செயல்படாமல்போனது. மேலும் அந்த பெண்ணின் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், அந்த செயலி போலியானது என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் ஈரோடு தொழில் அதிபர் மிக தாமதாமாகவே உணர்ந்தார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் யார், அந்த பெண்ணின் பின்னணியில் செயல்படுபவர்கள் யார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியும்.












Click it and Unblock the Notifications