அதிமுகவினரை சந்திக்க வாக்காளர்களுக்கு விருப்பமில்லை..ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஈரோடு: வாக்காளர்களை அதிமுக வேட்பாளரும், அவரது கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவர்களும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிமுகவினரை சந்திக்க விரும்பவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி, நேற்று தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 'நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்து, அதிமுகவினர் சந்திக்க விடாமல் செய்கின்றனர்' என்று தனது பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார் பழனிசாமி. திமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பிரிவு நிர்வாகி இன்பதுரை ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இன்று சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திமுக ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த இடைத்தேர்தலில் ஏற்படுத்துகின்றனர். மாற்றுக் கட்சியினர் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் ஈரோட்டில் 120 இடங்களில் வாக்காளர்களை அதில் அடைத்து வைத்துள்ளனர்.
தலைவர்கள் பிரச்சாரம் இல்லாத நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்களை அடைத்து வைப்பதோடு, பிரச்சாரம் என்ற பெயரில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்கென ஒரு வாக்காளருக்கு நாள் ஒன்றுக்கு, ரூ 500 முதல் 1000 வரை வழங்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்திற்கு வந்தபோது, காலை 11 மணி முதல் இரவு வரை அடைத்து வைத்து, தலா ரூ 2000 விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களை அதிமுக வேட்பாளரும், அவரது கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவர்களும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஞாயிற்றுக்கிழமையில், மட்டன், சிக்கன், மீன் இறைச்சி வீடுதோறும் ஒரு கிலோ வழங்கப்பட்டுள்ளது. இது போல கோலம்போட, ஆரத்தி எடுக்க, பூக்களைத் தூவ பணம், தட்டு, குடம் போன்ற பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். மக்கள் அதிமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று ஜெயக்குமார் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் என தெரிந்து, தோல்விக்கான காரணங்களை இப்போதே அதிமுகவினர் பட்டியலிடுகின்றனர். அனைத்து கூடாரங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள். எங்களை அடைத்து வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா? என்று கேட்டார்.
எங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்த செங்கோட்டையன், 'கைதட்ட கூட கூட்டம் வரவில்லை. வந்திருக்கிற 10 பேராவது கைதட்டுங்கள்' என்று கேட்கும் நிலைக்கு வாக்காளர்கள் அதிமுகவை புறக்கணிக்கின்றனர். அதிமுகவினர் விரக்தியில் உள்ளனர் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கடந்த 18 மாதத்தில் தமிழக முதல்வர் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். வாக்காளர்கள் எங்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, வாக்களிப்பதாக உறுதி அளிக்கின்றனர் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களைக் கொடுக்கின்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 50 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளதாக புகார் தெரிவிக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை திமுக தயாரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறது. 2021ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இருந்த வாக்காளர்கள் எவ்வளவு, தற்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், எப்படி போலி வாக்காளர்கள் வருவார்கள் என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications