"நம்பர் 3" நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கில் கேம் சேஞ்சராகும் 2 பேர்.. ஆஹா கமல் வேற இருக்காரு.. போச்சு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் மே மாதம்தாம் எப்போதும் "சம்மர்" தொடங்கும். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி இறுதியிலேயே சம்மர் தொடங்கிவிடும்.. காரணம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் ஏற்கனவே இருக்கும் சூட்டை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.

தேர்தல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்தே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது.

அதிமுக - திமுக
இதில் அதிமுக போட்டியிடாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மீண்டும் யுவராஜ் அல்லது வேறு வேட்பாளர் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் திமுக இங்கு மீண்டும் போட்டியிட காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஈவெரா திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. பாஜக இதில் என்ன நிலைப்பாடு எடுக்கும், தனித்து போட்டியிடுமா.. கூட்டணி வைக்குமா என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் : ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம்
முக்கியமாக நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்வரும் வாக்கு சதவிகிதத்தை பார்த்தாலே கடந்த தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மையம் எவ்வளவு சிறப்பாக செயலாற்றியது, தேர்தல் முடிவுகளை மாற்றியது என்பது தெரிய வரும்.
நம்பர் 1 - காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம்
நம்பர் 2- தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம்
நம்பர் 3- நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம்
நம்பர் 4- மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம்

தேர்தல்
கடந்த தேர்தலில் நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இதில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 11,629 , மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 10005. இந்த 21 ஆயிரம் வாக்குகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. கிட்டத்தட்ட 14 சதவிகித வாக்குகள். இந்த இடைத்தேர்தலில் இவர்கள் எடுக்க போகும் முடிவுகள்தான் தேர்தல் முடிவை மாற்றும்.

மக்கள் நீதி மய்யம்
திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

வாக்கு சதவிகிதம்
இப்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதால் இரண்டு விதமான நிலைப்பாடுகளை அவர் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு நேரடியாக ஆதரவு கொடுப்பது. அப்படி செய்யும் பட்சத்தில் அது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும். அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும்., ஏனென்றால் கமல்ஹாசனுக்கு இங்கு 6-7 சதவிகிதம் வாக்கு வங்கியும் உள்ளது. இது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரிதாக உதவும். முக்கியமாக கொங்கு வேளாள கவுண்டர்களின் கணிசமான வாக்குகள் கமல்ஹாசன் பக்கம் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

திமுக
இன்னொரு பக்கம் அதிமுக, பாஜகவிற்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி இன்றியே அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக வேட்பாளர் வானதிக்கு கோவை தெற்கில் கமல்ஹாசன் கடும் போட்டியாக இருந்தார். அப்படி இருக்க காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தால் காங்கிரஸ் - திமுக இங்கு வெற்றிபெறுவது மிக எளிதாகிவிடும். இன்னொரு பக்கம் கமல்ஹாசன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு. ஏனென்றால் 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மநீம இணைய வாய்ப்பு உள்ளதாக வரும் தகவல்களால் இந்த தேர்தலிலேயே அந்த கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவும் வாய்ப்புகள் உள்ளன.

நாம் தமிழர்
இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி தேர்தலை புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்களின் வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு கண்டிப்பாக செல்லாது. காங்கிரசும் - நாம் தமிழரும் பரம வைரிகள். இதனால் பெரும்பாலும் நாம் தமிழர் வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்கு செல்லும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால் தேர்தலில் என்ன நடக்கும் நின்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications