கிண்டியிலேயே இருக்கே? திடீரென வண்டியை விட்ட ஆளுநர் ரவி.. ஈரோட்டுக்கு போனது ஏன்? குலுங்கிய கொங்கு!
ஈரோடு: ஆளுநர் ஆர். என் ரவி நேற்று ஈரோட்டுக்கு சென்றது ஏன் என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தற்போது அரசியல், கலாச்சாரம் ரீதியாக பேசி வருகிறார். சமீபத்தில் வேலூரில் நடந்த அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் . என் ரவி பேசினார்.
நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.
இதுதான் சனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சானதான கலாச்சாரம் என்று குறிப்பிட்டார்.

ஆரியம் திராவிடம்
ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பல மேடைகளில் திராவிடம், ஆரியம், கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று ஈரோட்டிற்கு சென்றார். அங்கு உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கடுமையாக போராடி, தூக்கு மேடை ஏறியவர் தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலை
இந்த நிலையில்தான் தீரன் சின்னமலை நினைவிடத்தில் நேற்று ஆளுநர் ரவி மரியாதை செய்தார். தீரன் சின்னமலை ஆடி பெருக்கன்றுதான் தூக்கிலியிடப்பட்டார். இதனால் எல்லா வருடமும் அதே நாளில் அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் ஈரோடு வரை சென்று தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்தார். ஆனால் ஆளுநரின் இந்த செயல் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன விவாதம்
கிண்டியில் ஆளுநர் மாளிகைக்கு அருகிலேயே தீரன் சின்னமலை நினைவிடம் இருக்கிறது. அங்கே இருக்கும் சிலைக்கே அவர் மரியாதை செய்து இருக்கலாம். நிறைய அரசியல் தலைவர்கள் நேற்று அந்த சிலைக்குத்தான் மரியாதை செய்தனர். ஆனால் ஆளுநர் ரவி நேற்று ஈரோடு வரை பயணம் செய்து போய் மரியாதை செய்தார். இதுதான் கொங்கு மண்டலத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு ஆதரவான அலையை ஏற்படுத்த இப்படி பயணம் செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் சார்பு இல்லை
கிண்டியிலேயே சிலை இருக்கும் போது அவர் ஏன் ஈரோடு சென்றார் என்ற விவாதம் எழுந்துள்ளது. அதே சமயம் ஆளுநர் ஒருவர்.. தீரன் சின்னமலைக்கு மரியாதையை செய்ய ஈரோடு வரை வந்தது அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் ஆளுநர் பதவி என்பது அரசியல் சார்பற்றது. தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரர் என்பதால் அவருக்கு மரியாதை செய்ய ஆளுநர் ரவி வந்தார். இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?
நேற்று இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, சிலர் வரலாற்றை திரிக்க முயன்று வருகிறார்கள். அது இனியும் நடக்காது. சிலப்பதிகாரத்தில் கூட பாரதம் குறித்த கருத்துக்கள் உள்ளன. அதில் இந்து தர்மம் குறித்த கருத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் கருத்துக்களை அழிக்க முடியாது. இதில் உள்ள வரலாற்றை அழிக்க முடியாது. இவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும், என்று ஆளுநர் ஆர் . என் ரவி தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications