ஹேய்.. என்ன இப்படி பண்றீங்க! முகத்தை சுளிக்க வைத்த சம்பவம்! பதறிய அதிமுக "தலை".. மாட்டிக்கிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்று நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. அதிமுக தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் சசிகலா vs எடப்பாடி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதிமுக கூட்டம்

அதிமுக கூட்டம்

இந்த நிலையில்தான் நேற்று அதிமுக சார்பாக கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்டது. அந்தியூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அதிமுக சார்பாக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா கொங்கு மண்டலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் அங்கு எடப்பாடி அணியும் கூட்டங்களை நடத்தி தொண்டர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதன் ஒரு கட்டமாகவே நேற்று ஈரோட்டில் நடைபெற கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அதிமுக தற்போது வலிமையான தலைமைக்கு கீழ் இருப்பதாக கூறினார். அதிமுகவில் உட்கட்சி மோதல் எதுவும் இல்லை. கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள், கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இல்லாதவர்கள்தான் கட்சியில் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள், என்று குறிப்பிட்டார்.

டான்ஸ்

டான்ஸ்

இந்த கூட்டத்திற்கு முன்பாக செங்கோட்டையன் வருவதற்கு முன் அதே மேடையில் அதிமுகவினர் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த மேடையில் அப்போது பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடினர். அரைகுறை ஆடையுடன் பெண்கள் நீண்ட நேரம் நடனம் ஆடினார்கள். அதேபோல் பின்னணியில் ஆபாசமான பாடல்களும் பாடப்பட்டது. இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

நைட்டி

நைட்டி

சில பெண்கள் நைட்டியோடு வந்து மேடையில் நடனம் ஆடியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டத்திற்கு வந்த பெண்கள் இதை பார்த்து முகம் சுளித்தனர். அதேபோல் மகளிரணி நிர்வாகிகளும் இதை பார்த்து முகம் சுளித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மாட்டிக்கிட்டிங்களே.. இப்படி எல்லாம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டுதான் நீங்கள் கூட்டம் கூட்ட வேண்டுமா என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி அணியினரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+