மசாஜ் சென்டர், பியூட்டி பார்லர்களில் இனிமேல் இப்படித்தானாம்.. "எதிர் பாலினம்" குறித்து பறந்த உத்தரவு
மசாஜ் சென்டர்களில் புதிய கட்டுப்பாடுகள் விதித்த கவுகாத்தி நகராட்சி
கவுகாத்தி: மசாஜ் சென்டர்களில் புது கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இங்கில்லை.. கவுகாத்தியில் இது தொடர்பாக புது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அசாமில் கடந்த வருடத்தை பொறுத்தவரை கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது.. இதையடுத்து, அம்மாநில அரசு மிக தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டது.
இதற்கு பிறகு தொற்று கட்டுக்குள் வந்தாலும், கடந்த 4 மாதத்துக்கு முன்பு மறுபடியும் கொரோனா கேஸ்கள் அதிகமாயின.. இதற்கு பிறகு ஏராளமான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அம்மாநில அரசு கொண்டு வந்தது. பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு தந்ததையடுத்து, தொற்று மெல்ல மெல்ல கட்டுக்குள் வர ஆரம்பித்தது.

கொரோனா
இப்போது, தினசரி கொரோனா கேஸ்கள் 300-க்கும் குறைவாகவே பதிவாகி வருகின்றன.. அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்தை தாண்டி விட்டது என்றாலும், 2 ஆயிரத்து அதிகமானோர் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கவுகாத்தி முனிசிபல் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

மசாஜ் சென்டர்கள்
அதன்படி, அங்குள்ள ஸ்பாக்கள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கான புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிட்டுள்ளது.. பியூட்டி பார்லர்கள் அல்லது மசாஜ் சென்டர்களில், மசாஜ் செய்வதற்கு எதிர்பாலினத்தவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்வாடிக்கையாளருக்கு, ஆண் பணியாளர்கள் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும்.. அதேபோல பெண்களுக்கு பெண்கள் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும்.. எதிர் பாலினத்தவர்களால் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை அல்லது மசாஜ் செய்வதை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
குவாஹாத்தி மாநகராட்சியின் இணை ஆணையர் சித்தார்த் கோஸ்வாமி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மேலும் சொல்லும்போது, "ஸ்பா, சலூன்கள், பியூட்டி பார்லர்கள் போன்றவற்றுக்கான புதிய நடைமுறை தரநிலையை நாங்கள் வெளியிட்டுள்ளோ.. இப்போது, மாற்று பாலினத்தவர்களால் சிகிச்சை அல்லது மசாஜ் செய்ய முடியாது.. அதேபோல, பியூட்டி பார்லர், ஸ்பா, சலூன் வளாகத்தில் பிரத்தியேகமான ரூம்கள் எதுவும் இருக்கக்கூடாது..

வெளிப்படைத்தன்மை
வெளிப்படைத்தன்மையுடன் சிகிச்சை இருக்க வேண்டும்.. பார்லர்களிலும், ஸ்பாக்களிலும் தகுதியான சிகிச்சையாளர்கள் இருக்க வேண்டும்.. சில ஸ்பாக்கள், பியூட்டி பார்லர்களில் சமீப காலமாக பொதுமக்களிடமிருந்தே புகார்கள் வந்துள்ளதால், இத்தகைய புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கவுகாத்தி மக்களுக்கு நிம்மதியையும் தைரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications