7 வருடமாக.. பிஞ்சு சிறுமியை.. ஒரே அறையில் அடைத்து வைத்து இருந்து கொடூர தந்தை.. என்ன காரணம்?
ஓசூர்: ஓசூர் அருகே கிராமம் ஒன்றில் சிறுமி ஒருவர் 7 வருடமாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2015ல் வெளியாகி 4 ஆஸ்கர் விருதுகளை குவித்த ஆங்கில படம் ரூம். ஒரே அறையில் அம்மா, மகளை கடத்தல்காரன் ஒருவன் பல வருடங்கள் அடைத்து வைத்து இருப்பதும், அந்த ரூமிற்கு உள்ளேயே அந்த குழந்தை வளர்வதும்தான் இந்த படத்தின் கதை. படத்தின் கிளைமேக்சில் அந்த குழந்தை ரூமை விட்டு முதல் முறை வெளியே வரும் காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும்.
அப்படி ஒரு சம்பவம்தான் ஓசூர் அருகே நடந்துள்ளது. ஓசூர் அருகே இருக்கும் கர்நாடகாவை மாநிலத்தை சேர்ந்த கிராமம் காளிபீடு. இங்கு கூலித்தொழில் செய்து வருபவர் தனஞ்செயா.

கொடுமை
2014ம் வருடம் இவரின் மனைவி உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவர்களுக்கு அப்போது 7 வயது பெண் சிறுமி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டு அந்த 7 வயது பிஞ்சு சிறுமி மனம் உடைந்து போனார். அம்மா போன சோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் அழுது இருக்கிறார். அம்மாவின் இழப்பை அவரால் ஏற்கவே முடியவில்லை. தினமும் கண்ணீர்விட்டு, அழுது சோகமாக இருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

மன ரீதியாக பாதிப்பு
அம்மா, அம்மா என்று வீட்டிற்கு உள்ளேயே கத்த தொடங்கி உள்ளார். மன அழுத்தம் காரணமாக அந்த சிறுமி இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை முதலில் சில மருத்துவர்களிடம் கொண்டு சென்று இருக்கிறார். அவர்களும் சில மருந்துகளை கொடுத்துள்ளனர். சில நாட்கள் நன்றாக இருந்த அந்த சிறுமி பின்னர் மீண்டும் அதேபோல் மோசமான மனநிலைக்கு வந்து இருக்கிறார்.

அடைத்து வைத்தார்
அம்மாவின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் விடாமல் கண்ணீர்விட்டு கத்தி உள்ளார். மேல் சிகிச்சைக்கு கொஞ்சம் கூடுதல் செலவு செய்தால் அவரை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெற்ற மகளுக்கு செலவு செய்ய விரும்பாத தந்தை தனஞ்செயா மகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். அதோடு மகளை அருகே ஒரு குட்டி வீட்டில் அடைத்து வைத்துள்ளார். நாய்களுக்கு கட்டப்படுவது போல குட்டி வீட்டில் சங்கிலி கட்டி அடைத்து வைத்து இருக்கிறார்.

7 வருடம்
இப்படி ஒருநாள், இரண்டு நாள் அல்ல மொத்தம் 7 வருடம் அந்த சிறுமியை அவரின் அப்பாவே அடைத்து வைத்து இருக்கிறார். அதிலும் தினமும் ஒருவேளை உணவு மட்டும் கொடுத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அந்த அறைக்கு உள்ளேயே அந்த சிறுமி இயற்கை உபாதைகளையும் கழித்து இருக்கிறார். இத்தனை வருடமாக அந்த சிறுமி வெளி உலகத்தையே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. என் பொண்ணுக்கு பைத்தியம்.. அதனால்தான் இப்படி என்று ஊர்காரர்களிடம் அப்பா தனஞ்செயா காரணம் சொல்லி இருக்கிறார்.

போலீஸ் கைது
இதை ஊர்காரர்களும் நம்பி இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதிக்கு தொண்டு பணிகளை செய்ய வந்த தின்மயா என்ற பெண் இந்த விஷயம் அறிந்து போலீசுக்கு புகார் அளித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 7 வருடங்களுக்கு பின் முதல்முறையாக அந்த சிறுமி வெளி உலகத்தை நேற்றுதான் பார்த்தார். அதோடு தனஞ்செயாவை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications