அலறிய கள்ளக்காதலன்.. அடித்தே கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை.. உதவிய உறவினர்.. ஓசூரில் ஷாக்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாக்குவாதம் முற்றி கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை மற்றும் அவரது தங்கை மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்த 39 வயதாகும் ஜோதி அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஜோதியின் கணவர் கேசவமூர்த்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்த 40 வயதாகு வெங்கடேஷ் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார். இதனால் வெங்கடேசுக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது.
இதை கண்டுபிடித்த ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர் கண்டுபிடித்தார். தன் பெரியம்மா ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் கடும் கோபம் அடைந்தார். தனது பெரியம்மாவிடம் இப்படி எல்லாம் நீங்கள் செய்யலாமா என்று கேட்டு கண்டித்துள்ளார்.
உண்மை வெளியே தெரியவந்ததால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு அங்கன்வாடி மைய ஆசிரியை ஜோதியின் வீட்டிற்கு டிரைவர் வெங்கடேஷ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீங்க.. இனி மேல் இந்த பக்கமே வரக்கூடாது என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்துள்ளார்கள். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.
இதனிடையே படுகாயம் அடைந்து அலறிய வெங்கடேசின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய தங்கை மகன் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஓசூர் பேரிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக திருமணத்தை மீறி உறவுகள் கொலை அல்லது தற்கொலையில் தான் முடிகிறது. உறவினர்களுக்கு தெரியாமல் நடக்கும் இந்த சம்பவங்கள் வெளியே தெரியவரும் போது, விபரீதம் ஏற்படுகிறது. சமூகத்தில் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications