கர்நாடகா பிரஷர் இருக்கட்டும்.. கெத்தாக தமிழக அரசு செய்த மூவ்.. ரெடியான ஓசூர் ஏர்போர்ட்? அசத்தல்!
ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது.
அடுத்த கட்டமாக வான்வெளியைக் கண்டறிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முடித்த பின்னரே, விமான நிலையம் அமைக்க ஒரு தளத்தை தேர்வு செய்ய முடியும். கடந்த அக்டோபரில், ஐந்து இடங்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்பின் இந்த 5 இடங்களின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு, சாத்தியக்கூறு அறிக்கையின் முதல் வரைவை AAI மாநில அரசுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து, அந்த 5 இடங்களில் இருந்து அரசாங்கம் இரண்டு தளங்களைத் தேர்ந்தெடுத்தது.

ஒன்று தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஏர்ஸ்ட்ரிப்பில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் மற்றொன்று உலகம் என்ற பகுதிக்கு அருகே (ஓசூருக்கு கிழக்கு மற்றும் சூளகிரிக்கு வடக்கே) 15.5 கிமீ தொலைவிலும் உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழக அரசு உறுதி செய்ய உள்ளதாம். ஏப்ரல் இறுதிக்குள் இடம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஏற்கனேவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதில் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அளித்த பதிலில், நாங்களும் உதவி செய்துவருகிறோம். எனினும், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ சுற்றளவில் வேறு விமான நிலையம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தம் சவாலாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கவேண்டும். கண்டிப்பாக நாங்கள் பாஸிடிவ் அணுகுமுறை எடுப்போம், என்று கூறி உள்ளார்.
ஓசூர் ஏர்போர்ட் இடம் தேர்வு:
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2 இடங்களை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. முதலில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 இடங்களாக அவை குறைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் விமானம் நிலையம் அமைப்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
AAI ஆல் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து தளங்களில், ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) க்கு சொந்தமான தனியார் விமான ஓடுதளமும் அடங்கும். பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள தொழில்துறை நகரமான ஓசூரில் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப படிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு, தமிழ்நாடு தலைநகருக்கான இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவதற்காக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு தளங்களில் AAI இன் ஆய்வுக்கு ஒப்பானது. பரந்தூர் விமான நிலையத்தின் அதே வேகத்தில் இந்த விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. AAI இதையடுத்து ஆய்வு அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடிவுசெய்துள்ளது.
கோரிக்கை:
ஓசூரில் உள்ள தொழில் அமைப்புகள் சங்கங்கள், தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இந்திய விமான நிலைய ஆணையத்திடமும் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூரில் முன்மொழியப்பட்ட கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைப்பதற்காக இரண்டு தளங்களை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பு இந்த வாரமே வெளியாக உள்ளதாம். மொத்தமாக 2 ரன் வே அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த ஏர்போர்ட் அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது. இடைக்கால சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) அடுத்த வாரம் இதற்கான ஆய்வைத் தொடங்கி உள்ளதாம். இந்த வாரம் இறுதியில் இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் 27ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிய விமான நிலையம், இயக்கப்பட்டதும், ஒரே ஓடுபாதையைக் கொண்டிருக்கும். அதன்பின் இரண்டு ஓடுபாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் விமான நிலையம்: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு பெங்களூர் முட்டுக்கட்டை போடும் என்று தகவல்கள் வருகின்றன. ஓசூர் ஏர்போர்ட்டுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பெங்களூரில் இரண்டாவது ஏர்போர்ட் அமைக்கும் பணிகளில் கர்நாடகா இறங்கி உள்ளது. இதற்காக இப்போதே இடங்களை கண்டுபிடித்துள்ளது. இதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்கள், துமகுரு சாலை, மைசூர் சாலை, குனிகல் சாலை, கனகபுரா சாலை, தொட்டபல்லாபூர் மற்றும் டோப்ஸ்பேட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஓசூரில் ஏர்போர்ட் அமைப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் விமான நிலையமான BAIL பெங்களூரை சுற்றி ஏர்போர்ட் அமைக்க ஓசி.. அதாவது தடை சான்றிதழ் வாங்கி உள்ளது. அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் மத்திய அரசு பெங்களூரை சுற்றி புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு கொடுக்காது. இதை பயன்படுத்தி ஓசூரில் விமான நிலையம் அமைக்க பெங்களூர் எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
ஓசூர் வளர்ச்சி; தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.
பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்களால் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications