கொள்ளை போன நகைகளை காப்பீடு செய்துள்ளோம்.. வாடிக்கையாளர்களுக்கு இழப்பு இல்லை.. முத்தூட் அறிவிப்பு
ஒசூர்: திருடப்பட்ட தங்கம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இழப்பை சந்திக்க மாட்டார்கள் என்று முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒசூரில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை இன்று காலை கொள்ளையடித்து தப்பியோடினர். இந்த நிலையில், இது குறித்து முத்தூட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (22-1-2021) காலை ஒசூர், பாகலூர் ரோடு பகுதியில் உள்ள உள்ள எங்கள் முத்தூட் நிதிக் கிளையில் ஒரு துரதிர்ஷ்டவசமான ஆயுதக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

தங்கம் மீட்டெடுக்கப்படும்
குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய சம்பவம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளோம். முத்தூட் ஃபைனான்ஸில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை. காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும் என்றும், திருடப்பட்ட தங்கம் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு இழப்பு இல்லை
திருடப்பட்ட தங்கம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இழப்பை சந்திக்க மாட்டார்கள் என்று எங்கள் வாடிக்கையாளருக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். நாங்கள் நம்பிக்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். முத்தூட் நிதி பல தலைமுறைகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மரபு மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

பாதுகாப்பு
வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் அதே நேரத்தில், காயமடைந்த எங்கள் கிளை ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான ஆதரவை வழங்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கிறோம்.

குற்றவாளிகள் கைது
இந்த கிளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், விரைவில் வழக்கமான வேலைகளைத் தொடங்குவோம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் மற்றொரு அறிக்கையை வெளியிடுவோம். இவ்வாறு முத்தூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications