கர்நாடக-தமிழக எல்லையில் காலையிலேயே கலாட்டா, மாலை 4 மணிவரை வாகனங்களுக்கு சலுகை! கிருமிநாசினி தெளிப்பு
ஒசூர்: பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
Recommended Video
"தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநில எல்லைகளும், சீல் வைக்கப்படுகிறது" என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பெங்களூரில் இருந்து இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களை திரும்பிச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென கூறினால் எப்படி? நாங்கள் அவசர வேலையாக செல்கிறோம். என்றெல்லாம் கூறி வாகன ஓட்டிகள் ஆதங்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று மாலை 4 மணி வரை நீங்கள் சென்று கொள்ளலாம். அதற்குப் பிறகு அனுப்ப முடியாது என்று உறுதியாக அதிகாரிகள் தெரிவித்து வாகனங்களை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். பெங்களூரை, தாண்டியதும் அத்திபெலே என்ற பகுதியில் தமிழக-கர்நாடக எல்லை புறம் உள்ளது. இங்கு தமிழகம் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

இதற்காக, முகக் கவசம் அணிந்த பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் அவசர தேவையாக செல்வோர் இப்பொழுதே கிளம்பி தமிழகம் சென்ற வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.


-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications