தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்கு மத்திய பாஜக அரசு செய்த உதவிகள் என்ன? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முறையான திட்டமிடலுடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 704 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 74 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் 15 மருத்துவ கல்லூரிகளை அமைத்துள்ளது. தேசிய அளவில் தரவரிசையில் முதல் 50 இடம் பிடித்த மாணவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 மருத்துவ மாணவர்கள் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில், கடைக்கோடி கிராமத்தில் உள்ள சாமானியனும் தரமான மருத்துவசேவை பெறுவதை உறுதி செய்துள்ளது. நாடு முழுக்க எல்லோருக்கும் மருத்துவம் சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மத்திய அரசு கருணை உள்ளத்தோடு அறிமுகப்படுத்திய, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆயுஷ்மான் பாரத், தேசிய சுகாதாரத் திட்டம், மிஷன் இந்திரதனுஷ், தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன், நவ்ஜாத் சிஷு சுரக்ஷா காரியக்ரம், பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா போன்ற திட்டங்கள், எளிய மக்களும் மருத்துவ சேவை பெறும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு மருத்துவம் சென்று சேர மிக முக்கியமான திட்டங்களாக இவை உள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 1.42 கோடி குடும்பங்களை சென்று சேர்ந்துள்ளதும், இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டுகள் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளதும் இதற்கு மிகப்பெரிய உதாரணம்.
குறைந்த விலையில் தரமான மருந்துகள் மக்களுக்கு கிடைக்க வேண்டுமெனும் நோக்கில், பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா திட்டத்தின் மூலம், மத்திய அரசு தமிழ்நாடு முழுவதும் 910 மக்கள் மருந்தகங்களை திறந்துள்ளது. அவசர தேவைக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க இதைவிட பெரிய வாய்ப்பு இல்லை. இந்த மக்கள் மருந்தகங்கள் மூலம், 1963 க்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை சாதனங்கள் மக்களுக்கு மிக குறைவான கட்டணத்தில் தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படுகிறது
முக்கிய சிகிச்சைகளான இதய சிகிச்சை, புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு நோய் எதிர்ப்பு, தொற்று நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, வயிறு, குடல் சிகிச்சை மற்றும் சத்துக்கான மருந்துகள் இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் பல ஆயுர்வேத தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, சுகாதாரத் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புக்காக பிரதமர் மோடி 3,000 கோடி ரூபாய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் திட்டம் இது என்றுதான் சொல்ல வேண்டும்.
மத்திய அரசின் இத்தகைய முயற்சிகள் தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் வசிக்கும் சாமானிய மனிதனும் மருத்துவ கட்டமைப்பில் இணைந்திருப்பதை உறுதி செய்வதோடு, நியாயமான குறைந்த விலையில் மருந்துகளை பெறவும், மருத்துவரை அணுகவும் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மருத்துவ துறையில் மத்திய அரசு கிட்டத்தட்ட இதன் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
-
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!











Click it and Unblock the Notifications