திருப்பதி தேவஸ்தானம் போன "லட்டு" நியூஸ்.. ஒரே மணி நேரத்தில் கிடைத்த ரூ.19.35 கோடி.. எப்படி தெரியுமா?
ஹைதராபாத்: ஒரு மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், கோவில் நிர்வாகத்திற்கு 19 கோடியே 35 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.. தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால், பெரும்பாலானோர் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
எனவே, திருப்பதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை பின்பற்றி வருகிறது.

தேவஸ்தானம்: மாதந்தோறும் ரூ 300 தரிசன டிக்கெட்டை திருப்பதி தேவஸ்தான் ஆன்லைனில் வெளியிட்டு வருவது வழக்கம்.. அதாவது, ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முந்தைய மாதமே வெளியிடப்படுவது வழக்கம். இதை அனைத்தும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு மே, ஜூன் மாதங்களில் வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது.
இந்த அறிவிப்பினையடுத்து, ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் முன்பதிவு செய்தனர்.. திருப்பதி ஒரே மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கை 6,45,000 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபாஷ் : ஒரே மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து முடித்தனர்.. இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 19 கோடியே 35 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாம்.. அதாவது, மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் ரிசர்வ் செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவையே முடங்கியது.
எனவே, பக்தர்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் திணறிவிட்டனர்.. இருந்தாலும் தொடர்ந்து பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டே இருந்தனர்... ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.. இறுதியில், வெளியிடப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

எச்சரிக்கை அறிக்கை: முன்னதாக, திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தை போல் போலியாக சில இணையதளங்கள் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பை கிளப்பின.. இதையடுத்து, கிட்டத்தட்ட 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.. மேலும், ஒரு போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேவஸ்தானம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தேவஸ்தானத்தின் மொபைல் செயலியை பயன்படுத்துமாறும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications