லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் பிரபாஸை களமிறக்க பாஜக திட்டம்.. பரபர ஆபரேஷன் பாகு!
லோக்சபா தேர்தலுக்காக பாஜக சார்பில் ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலுக்காக பாஜக சார்பில் ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
டோலிவுட்டில் மட்டும் பிரபலமாக இருந்த நடிகர்தான் பிரபாஸ். தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே இவரை தெரிந்து இருந்தது. இந்த நிலையில் பாகுபலி படம் மூலம் இவர் உலக வைரலானார்.
பாகுபலி படத்தில் சில இடங்களில் இந்துத்துவா கருத்துக்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்த நிலையில்தான் பாகு பிரபாஸின் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

தேர்தல்
லோக்சபா தேர்தலில் பாஜக எப்படியாவது ஆந்திராவில் அதிக இடங்களை பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஏற்கனவே விலகிவிட்டது. அதே போல் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத காரணத்தால் அம்மாநில மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பிரபாஸை பயன்படுத்த
இதனால் தற்போது பிரபாஸை தேர்தல் நேரத்தில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தேர்தலில் நிற்க வைக்கவும் பாஜக திட்டமிடுகிறது. பாஜக வலுவில்லாமல் இருக்கும் பகுதியில் பிரபாஸை நிற்கவைத்து கல்லா கட்ட பாஜக யோசித்து வருவதாக கூறுகிறார்கள்.

வாய்ப்புள்ளது
ஏற்கனவே பிரபாஸின் சித்தப்பா தொடங்கி அவரின் நெருங்கிய உறவினர்கள் பலர் பாஜகவில் இருக்கிறார்கள். அதேபோல் பிரபாஸின் மாமா மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜுவிற்கு ஆந்திரா கவர்னர் பதவியை பாஜக அளிக்க உள்ளதாகவும் தகவல் வருகிறது. இதனால் பிரபாஸ் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அட
அதே சமயம் பிரபாஸ் இப்போது அரசியலுக்கு வர கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரியுள்ளனர். அவர் இப்போதுதான் தனது சினிமா வாழ்வில் உச்சத்தில் உள்ளார். அதனால் அவர் இப்போது அரசியலுக்கு வர கூடாது. ஏற்கனவே பவன் கல்யாண் தொடங்கி பலர் அரசியலுக்கு வந்து சினிமாவைவிட்டு விலகிவிட்டதால் பிரபாஸும் அரசியலுக்கு வர அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications