Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலில் அதிக அளவு மயக்க மருந்து.. மாணவிக்கு பல நாட்களாக டார்ச்சர்.. நாட்டையே அதிர வைத்த மரணம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் பல நாட்களாக ராகிங் டார்ச்சர் செய்ததால் விரக்தி அடைந்த மருத்துவ மாணவி, ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் மயக்க மருந்தை ஊசியில் அதிகளவு செலுத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ராகிங் சித்ரவதை செய்த மாணவரை போலீசார் கைது செயதுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள காகடியா மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் முதலாம் ஆண்டு வந்தவர் ப்ரீத்தி வயது 26. இவர் தன்னுடன் பயிலும் மாணவிகளுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்தார். டாக்டர் ப்ரீத்தி இரவு நேர பயிற்சியின் போது மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில், ப்ரீத்தி சுயநினைவற்று மயங்கி கிடந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் மயக்க ஊசியை, தனது உடலில் அதிகளவில் செலுத்தி ப்ரீத்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

மாணவர் கைது

மாணவர் கைது

இதன் அடிப்படையில் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், வாட்ஸ்அப்பில் பதிவாகியிருந்த மெசேஜ்கள் மூலம் மாணவிக்கு சீனியரால் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், மருத்துவம் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவரான முகமது சயீஃப் என்பவர் மாணவிக்கு ராகிங் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

கவுன்சிலிங் கொடுத்தனர்

கவுன்சிலிங் கொடுத்தனர்

மாணவி ப்ரீத்தியை பயிற்சியின் போது சங்கடத்துக்கு உள்ளாக்கும் விதமாக பேசியதுடன், மோசமான சொற்களால் முகமது சயீஃப் காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.. தொடர்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சயீஃப் ராகிங் செய்தும், இழிவாக பேசியதால் விரக்தி அடைந்த மாணவி ப்ரீத்தி பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்கள். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தது.

மாணவி மரணம்

மாணவி மரணம்

இந்நிலையில் மாணவி ப்ரீத்தி ராகிங் தொல்லையை தாங்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று இரவு மருத்துவமனையில் ஒரு அறையில் மயக்க மருந்தை ஊசியில் அதிகளவு செலுத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாராம். இதனால் அவருக்கு வயிற்று வலி, தலைவலி ஏற்பட்டு மயங்கி உள்ளார். இதைபார்த்த சக மாணவிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால், வாரங்கலில் இருந்து ஹைதரபாத்தில் உள்ள மருத்துவனைக்கு உயர்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மாணவி ப்ரீத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

மாணவர் கைது

மாணவர் கைது

இதையடுத்து ராகிங் குற்றச்சாட்டை அடுத்து மருத்துவ மாணவர் சயீஃப்பை வாரங்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவியின் சாதியை குறிப்பிட்டு இளைஞர் ராகிங் செய்ததாக தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனை முன்பு பழங்குடியின அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ராகிங் தொல்லையால் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு 30 லட்சம் இழப்பீடு தருவதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டார்.

விரட்டியடிப்பு

விரட்டியடிப்பு

இதனிடையே டாக்டர். டி. ப்ரீத்தியின் இறுதிச் சடங்குகள் பிப்ரவரி 27 அன்று ஜங்கான் மாவட்டத்தில் உள்பழங்குடியின குக்கிராமமான கிர்னி தாண்டாவில் செய்யப்பட்டது. அவருக்கு ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே வாரங்கல் மாவட்டம் மாட்வாடா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எம்.டி மயக்க மருந்து பாடப்பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் டாக்டர் சயீஃப்பை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பழங்குடியின அமைப்புகளின் ஆர்வலர்கள் மறியல் செய்தனர். மாணவியின் 'தற்கொலை' குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த குடும்பத்திற்கு விரைந்து நீதி கிடைக்க காகதியா மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு ₹5 கோடி கருணைத் தொகை மற்றும் குரூப்-1 கேடர் அரசு வேலை வழங்கக் கோரி போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். ஆனால் அவர்களை பழங்குடியின குக்கிராமத்திலிருந்து போலீசார் விரட்டியடித்தனர்.

ராகிங் டார்ச்சர்

ராகிங் டார்ச்சர்

"ஏழைகளுக்கு சேவை செய்யவும், எங்கள் பழங்குடியின குக்கிராமத்திற்கு விருதுகளை கொண்டு வரவும் ப்ரீத்தி மயக்க மருந்து நிபுணராக மாற விரும்பினார், ஆனால் டாக்டர். சைஃப் மற்றும் கல்லூரி அதிகாரிகளின் அவலநிலையில் அக்கறையின்மையால், ராகிங் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தலுக்கு இரையாகிவிட்டார் என்று டாக்டர் ப்ரீத்தியின் தந்தை நரேந்தர் கதறி அழுதபடி கூறினார். தன்மகளின் மரணத்தில் தவறான தகவல் பரவுவதாகவும், உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் நரேந்தர் கதறி அழுதபடி கூறினார். "என் மகள் மிகவும் விடாமுயற்சியுள்ள மாணவி, அவள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு பலவீனமாக இல்லை. உண்மைகளை வெளிக்கொணரவும், அவரது மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றார் அந்த தந்தை.

மரண தண்டனை

மரண தண்டனை

டாக்டர் ப்ரீத்தியின் மூத்த சகோதரி பூஜா கூறும் போது "எனது சகோதரியின் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவும் மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்றார். எப்படியாவது படித்து டாக்டர் ஆக வேண்டும் அது மயக்க மருந்து நிபுணராக வேண்டும் என்று ஆசைப்பட்ட பழங்குடியின மாணவியின் கனவு ராகிங் டாச்சரால் நடக்காமல் போனது, கனவுகளோடு அந்த மாணவி கரைந்து போனது மொத்த தெலங்கானா மாநிலத்தையும் உலுக்கி உள்ளது. நாடு முழுவதுமே இந்த சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+