‛நடிகை அஞ்சலியை பதறவைத்த பாலய்யா’.. ‛கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ பிரீ ரிலீஸ் மேடையில் தள்ளியதால் பரபரப்பு
ஹைதராபாத்: ‛கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ தெலுங்கு திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி மேடையில் திடீரென்று நடிகர் பாலய்யா தள்ளிவிட்டதால் நடிகை அஞ்சலி பதறிப்போன வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கு மொழியில் ‛கேங்ஸ் ஆஃப் கோதவரி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்டத்தை இயக்குனர் கிருஷ்ண சைத்தன்யா இயக்கி உள்ளார்.

ஹீரோவா விஷ்வாக் சென் நடித்துள்ளார். ஹீரோயினாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்கள் தவிர நேகா செட்டி, கன்னட நடிகர் சாய் குமார், தமிழ் நடிகர் நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் 31ம் தேதிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் தான் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதரபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி பங்கேற்றார். அதேபோல் நடிகர் பாலய்யாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேடையில் நடிகை அஞ்சலி நின்று கொண்டிருந்த நிலையில் அவரை நோக்கி நடிகர் பாலய்யா வேகமாக வந்தார்.
திடீரென்று அவர் நடிகை அஞ்சலியின் தோளை பிடித்து பின்னோக்கி தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி 2 அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை. இதை அருகே நின்று பார்த்த மற்றொரு நடிகை அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் நடிகை அஞ்சலியை பிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் பாலய்யா எதற்காக மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளினார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவை பார்க்கும்போது பாலய்யா தள்ளினாலும் கூட நடிகை அஞ்சலி சிரிக்கிறார். அதோடு மேடைக்கு அருகே இருந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்கின்றனர். இதனால் நடிகர் பாலய்யா வேடிக்கைக்காக நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளியிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications