Allu Arjun: திருமண வரவேற்பில் அல்லு அர்ஜுன் வந்து நின்றதும்! Angry bird-ஆன மணப்பெண்! நடந்தது என்ன?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு திருமண விழாவில் மணப்பெண்ணுக்கு அருகே அல்லு அர்ஜுன் நின்ற போது, அந்த பெண், ஒரு வயதான பெண்ணை இழுத்து நடுவில் நிற்க வைக்கிறார். இது ஏன் என்பது தெரியவில்லை. அந்த வயதான பெண்ணும் அல்லு அர்ஜுனை ஒரு மாதிரியாகவே பார்க்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் இருப்பது அல்லு அர்ஜுனின் உறவினர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிகழ்வு என்கிறார்கள். ஆனால் இது 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ ஏன் வைரலாக்கப்படுகிறது என தெரியவில்லை.

அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் மணமகள் பக்கத்தில் போய் நிற்கிறார். உடனே அந்த பெண் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அருகே இருந்த தனது தாயை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து நிற்க வைக்கிறார்.
அப்போது அந்த வயதான பெண்ணும், அல்லு நகர்ந்து நிற்க மாட்டாரா என்பதை போல் கோபத்துடன் பார்க்கிறார். உடனே விபரீதத்தை உணர்ந்த அல்லு மனைவி சினேகா, அந்த வயதானவருக்கு பக்கத்தில் போய் நிற்கிறார்.
இறுதியாக அல்லு அர்ஜுன் கடைசி இடத்திற்கு சென்று நின்றுவிடுகிறார். இது பழைய வீடியோ என்றாலும் தற்போது விஜய் குறித்து விவாகரத்து விவகாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அல்லுவை டேமேஜ் செய்ய யாராவது இதை இப்போது பரப்பினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அல்லு அர்ஜுன் அண்மையில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் ரிசப்ஷனுக்கு சென்றிருந்தார். அங்கு ஸ்டைலிஷ் லுக் கொடுத்து வைரலானார். அது போல் அல்லு சகோதரர் அல்லு சிரிஷின் ப்ரி வெட்டிங் ஷூட்டிலும் ஸ்டைலாக சென்றார். அங்கு எடுத்த குடும்ப படங்களும் வைரலாகியுள்ளன.
ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன், சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை அல்லு அரவிந்த் பெரிய தயாரிப்பாளர். இவரது மாமா சிரஞ்சீவி.
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சி கடந்த 2024 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது அல்லு அர்ஜுன் சர்பிரைஸ் விசிட் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் கூட்டம் கூடியது. இந்த நெரிசலில் ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அது போல் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஹைதராபாத் போலீஸ் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்தது. டிசம்பர் 13, 2024 அன்று அவரை கைது செய்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அந்த ரசிகையின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் அறிவித்தார் அல்லு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications