காங்கிரஸில் இணையும் ஜெகன் மோகன்?.. டிகே சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை! கலையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
ஹைதராபாத்: ஆந்திரா சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு எம்பி, எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் சில முக்கிய டிமாண்டுகளை ஜெகன்மோகன் ரெட்டி, டிகே சிவக்குமாரிடம் வைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள வெளியாகி உள்ளன.
ஆந்திராவில் கடந்த 2019 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வென்றது. முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்று 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் மீண்டும் ஆந்திரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை பிடிக்க ஜெகன்மோகன் ரெட்டி முயற்சித்தார். ஆனால் மக்கள் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றது.
மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் கூட்டணி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அதன்படி 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றது. இதையடுத்து ஆந்திராவின் புதிய முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் மோசமான தோல்வியால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தீவிரமாகி உள்ளது. இதுதவிர அவரது கட்சி எம்எல்ஏக்களும் கட்சி தாவ தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியால் ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனால் விரைவில் ஜெகன்மோகன் ரெட்டியையும், சந்திரபாபு நாயுடு கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போதைய சூழலில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் சப்போர்ட்டை அவர் தேடுவதாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு தற்போது பாஜக கூட்டணியில் உள்ளதால், காங்கிரஸ் கட்சியை நோக்கி ஜெகன்மோகன் ரெட்டி செல்வதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் மறைந்த தந்தை ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்தவர். ஜெகன்மோகன் ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட பிறகு தான் தனிக்கட்சி தொடங்கினார். தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் உடன்பிறந்த தங்கை ஷர்மிளா தான் ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
இதனால் அவர் காங்கிரஸ் கட்சியுடன் தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளதாக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இதுதொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருடன், ஜெகன்மோகன் ரெட்டி பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளனர். அதாவது தற்போது ஜெகன்மோகன் ரெட்டி பெங்களூரில் அவருக்கு சொந்தமான பேலஸில் தங்கி உள்ளார். அங்கிருந்தபடியே கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருடன் அவர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய சூழலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியும் செல்வாக்கு இழந்து காணப்படுகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதேபோல் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி சில டிமாண்டுகளையும் முன்வைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா உள்ளார். அவருக்கு பதில் தன்னை காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்ய வேண்டும். அடுத்ததாக நடைபெறும் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்து அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏ ஒருவரும் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது அனபர்த்தி பாஜக எம்எல்ஏ நல்லமில்லி ராமகிருஷ்ண ரெட்டி இதுபற்றி கூறுகையில், ‛‛ஜெகன் மோகன் ரெட்டி தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க டிகே சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன. தேர்தல் தோல்வியால் மனவிரக்தியடைந்த ஜெகன்மோகன் ரெட்டி இந்த முடிவை எடுத்துள்ளார். தங்கை ஷர்மிளாவுக்கு பதில் காங்கிரஸ் தன்னை முன்னிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்'' என்றார்.
இந்த தகவல் தற்போது ஆந்திர அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் இணைக்க ஜெகன்மோகன் ரெட்டி விரும்புவதாக தகவல் வெளியாகும் அதேவேளையில் இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த 4 எம்பிக்கள் பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம்பிர்லாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications