அயன் பாக்ஸை முக்கிய உறுப்பில் வைத்து.. கல்லூரி மாணவருக்கு கொடூரம்! பதற வைக்கும் ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் தனியார் கல்லூரியில் படிக்கும் இளைஞர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ராகிங் என்பது கல்லூரிகளில் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் கொடூரம் நடப்பதாகப் புகார்கள் உள்ளன.

புதிதாக வரும் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்துவதே இந்த ராகிங். இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

 ராகிங்

ராகிங்

இருந்த போதிலும், ஆங்காங்கே இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன. சில சமயங்களில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கூட உடன் படிக்கும் சக மாணவரை மோசமாக நடத்தும் ஷாக் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் வருகின்றன. இந்தச் சூழலில் தான் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

 ஆந்திரா

ஆந்திரா


ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு விடுதி அறையில் வைத்து இந்த 4 பேரும் மாணவர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 கெஞ்சியும் விடவில்லை

கெஞ்சியும் விடவில்லை

இந்த வீடியோவில் அடி வாங்கும் அந்த மாணவன் தன்னை விட்டுவிடும்படி கொஞ்சுகிறார். இருப்பினும், அதைக் கண்டு கொள்ளாமல் மாணவர்கள் அவரை கொடூரமாகத் தாக்குகின்றனர். மேலும், அந்த மாணவரின் சட்டையைக் கிழித்து, அதையும் கழற்ற வைத்து அரை நிர்வாணமாக நிற்க வைக்கிறார்கள். தன்னை மன்னித்துவிடும்படி அடிவாங்கும் மாணவர் கெஞ்சுவதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அனுமதி

அனுமதி

இதில் தொடர்புடைய அனைத்து மாணவர்களும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்..இந்த கொடூர சம்பவம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அந்த மாணவர் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 அயன் பாக்ஸ்

அயன் பாக்ஸ்

பாதிக்கப்பட்ட அந்த மாணவர் அங்கித் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவரை இரும்பு கம்பி மற்றும் பிவிசி பைப்களை கொண்டு அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும், சூடான அயன் பாக்ஸை எடுத்து நெஞ்சு பகுதியில் வைத்துச் சூடு வைத்து உள்ளனர். நெஞ்சு மற்றும் கை பகுதிகளில் சூடு வைத்ததற்கான காயங்கள் தெரிகிறது. இதையடுத்து அவர் உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார்.

விசாரணை

விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்குள்ள தனியார் விடுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஏன் அந்த மாணவரைக் கொடூரமாகத் தாக்கினார்கள் என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+