Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசியிலும்கூட ஊழல்? பிரேசில் நிறுவனங்களுடன் கோவாக்சின் ஒப்பந்தம் ரத்து.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:: ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் போடப்பட்ட வேக்சின் ஒப்பந்தத்தை பாரத் பயேடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தற்போது மெல்லக் குறைந்துள்ளது. இதனால் அடுத்த அலை ஏற்படுவதற்கு முன் வேக்சின் பணிகளை முடிக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எந்தவொரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனால் ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் தடுப்பூசி கொள்முதலில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறது.

பிரேசில் ஒப்பந்தம்

பிரேசில் ஒப்பந்தம்

இந்நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரீசிசா மெடிகமெண்டோஸ் (Precisa Medicamentos) மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிகல்ஸ் எல்.எல்.சி. (Envixia Pharmaceuticals LL.C) ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 2 கோடி கோவாக்சினுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி பிரீசிசா மெடிகமெண்டோஸ் நிறுவனம் பிரேசில் நாட்டில் 3ஆம் கட்ட சோதனை முதல் அனுமதி வரையிலான நிலைகளில் உதவும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

ஊழல்

ஊழல்

இந்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது. ஆனால், இதில் மிகப் பெரியளவில் ஊழல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதாவது பிரேசில் நாட்டிற்கு வழக்கத்தைவிட அதிக விலைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் வேக்சின்களை வழங்குவதாகப் புகார்கள் எழுந்தன. அதிலும் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் சில முக்கிய அதிகாரிகள் கூட இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினர்.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

குறிப்பாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சக அதிகாரி ரிக்கார்டோ மிராண்டா, அதிக விலைக்கு வேக்சின் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கும் கோப்பிற்குக் கையெழுத்திடும்படி தன்னை சிலர் வற்புறுத்தியதாக கூறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சூழ்நிலையில் பிரேசில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ANVISA உடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி, கோவாக்சின் ஒப்பந்தத்தை இறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக்

பாரத் பயோடெக்

தன் மீதான குற்றச்சாட்டுக்களை பாரத் பயோடெக் நிறுவனம் தொடர்ந்து மறுத்தே வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தடுப்பூசி விலை நிர்ணயம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், சர்வதேச சந்தையில் கோவாக்சின் விலை 15 முதல் 20 டாலராக இருப்பதாகவும் பிரேசில் நாட்டிற்கு 15 டாலருக்கு கோவாக்சின் விற்பனை செய்யப்படுவதாகவும் விளக்கமளித்திருந்தது. மேலும், வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே அனைத்தும் நடைபெறுவதாகவும் இதுவரை ஒரு டாலர் கூட முன்பணமாகப் பிரேசில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும் பாரத் பயோடெக் தரப்பில் கூறப்பட்டது.

Recommended Video

    Covaxin ஊழல்! Brazilன் Bolsonaro மீது விசாரணை | OneIndia Tamil
    பிரேசில் தேர்தல்

    பிரேசில் தேர்தல்

    பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஊழல் புகார் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக மக்களைத் திருப்பியுள்ளது. இதில் ஒப்பந்தத்தில் தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+