இந்திய முஸ்லீம்களின் அடையாளங்களை அழிக்க வேண்டும்.. இதுதான் பாஜக கொள்கை.. ஒவைசி பேச்சு
ஹைதராபாத்: இந்திய முஸ்லீம்களின் அடையாளங்களை அழிப்பதும்; இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதும் தான் பாஜகவின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
சமீபகாலமாக பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் பகிரங்கமாக அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டி வருகிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் அவர் தனது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டே, பாஜகவை அவர் கடுமையாக சாடி வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் கூட, ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய ஒவைசி, "முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்றால், அவர்கள் 'பிகினி' உடை அணிய வேண்டும் என பாஜக விரும்புகிறதா?" என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முஸ்லிம்கள்தான் பாஜகவின் கவலை
இந்நிலையில், ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களை ஒவைசி சந்தித்தார். அவர் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை சீர் செய்வது, பொருளாதாரத்தை மீட்பது குறித்தோ அரசுக்கு கவலையில்லை. அவர்களின் கவலைகள் எல்லாம் முஸ்லிம்கள் மீதுதான் உள்ளது.

பாஜகவை பயமுறுத்தும் தாடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இன்றைய கொள்கை என்னவென்று தெரியுமா? இந்திய முஸ்லிம்களின் அடையாளங்களை அழிப்பதும், நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதும் மட்டுமே. முஸ்லிம்களின் ஹலால் உணவும், முஸ்லிம்களின் குல்லாவும், அவர்கள் வைத்திருக்கும் தாடியும் தான் பாஜகவை பயமுறுத்துகிறது. இதுபோன்ற அடையாளங்களை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிதான் அவர்கள் சிந்தித்து வருகின்றனர்.

வளர்ச்சி பிடிக்கவில்லை
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கூறும் 'ஒருங்கிணைந்த வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி' என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தான். முஸ்லிம்கள் வளர்ச்சியடைவது அவர்களுக்கு பிடிக்காது. முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதே அவர்களின் விருப்பம். அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு இந்திய முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள் என்பதை நாம் பாஜகவுக்கு புரிய வைக்க வேண்டும்.

முஸ்லிம்களை ஒடுக்கும் முயற்சி
முஸ்லிம்களின் கல்வி நிலையமான மதரஸா, வழிபாட்டுத் தலமான மசூதி ஆகியவற்றை கூட பாஜக குறிவைக்க தொடங்கியுள்ளது. எதற்காக எங்கள் அடையாளங்கள் மீதும், நம்பிக்கைகள் மீதும் நீங்கள் (பாஜக) குறிவைக்கிறீர்கள்? எதற்காக மதரஸா கண்காணிக்கப்படுகிறது? ஏன் இந்து சமயத்துக்கு சொந்தமான கோயில்கள், குருகுலங்களை கண்காணிக்கக் கூடாது? இவையெல்லாம் முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் எடுக்கும் முயற்சிகள்தான். இவ்வாறு ஒவைசி பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications