சமந்தாவை படுக்கைக்கு அழைத்த கேடிஆர்! புயலை கிளப்பிய அமைச்சர்.. பாய்ந்து வந்த கேடிஆர்.. அதிர்ச்சி
ஹைதராபாத்: தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா நடிகை சமந்தா குறித்து பேசிய விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளன. அமைச்சர் கேடி ராமராவ் இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ் நடிகை சமந்தாவை படுக்கைக்கு அழைத்ததாக தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் தெலுங்கு சினிமாவில் பெண்கள் பலர் விரைவாக திருமணம் செய்ய கே.டி.ராமராவ்தான் காரணம். அவரால் பயந்து கொண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பெண்களையும் அவர் விடவில்லை.

சமந்தா வேண்டும் என்று கே.டி.ராமராவ் கேட்டார். அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் சாய் அக்கினேனியை விவாகரத்து செய்தார். வீட்டு ஆண்களுக்கு போதை பொருள் கொடுப்பது கே.டி.ராமராவ் வழக்கம். அவர்களை அடிமையாக்கி.. அவர்கள் வீட்டில் இருக்கும் நடிகைகளை கேட்பதுதான் கே.டி.ராமராவ் ஸ்டைல் என்று கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர். நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார். இந்த பிரிவிற்கு கே.டி.ராமராவ்தான் காரணம் என்று கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
பதிலடி: அமைச்சர் கேடி ராமராவ் இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கேடி ராமராவ் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமந்தா, நாகசைதன்யா விவாகரத்துக்கு நான் காரணமா? அமைச்சர் சுரேகா மன்னிப்பு கோர வேண்டும். உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வேன். அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.
அரசியல் எதிரிகளை விமர்சிக்க பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்துவதா? 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர் மீது கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும், என்று கேடி ராம்ராவ் கூறியுள்ளார்.
தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்களுக்கு நாக சைதன்யாவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனா அக்கினேனி கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார். இதெல்லாம் அப்பட்டமான பொய்.. என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டு இப்படி செய்வதா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு விவகாரத்தில் எப்படி இவர்களால் பொய் பரப்ப முடிகிறது, என்று நாகார்ஜுனா அக்கினேனி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
தெலுங்கானாவை இந்த விவகாரம் உலுக்கி உள்ளது. சமந்தா விவாகரத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியாத நிலையில்.. அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கள் அங்கே புயலை கிளப்பி உள்ளது.
சமந்தா இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியுள்ளது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications