தெலுங்கானா சட்டசபை தேர்தல்: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தரமான அரிசி! பிஆர்எஸ் தேர்தல் அறிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 30ஆம்தேதி நடைபெறும் நிலையில் பி.ஆர்.எஸ் கட்சி இன்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பிஆர்.எஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாகி உள்ளன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் கே .சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் கூறுகையில் தெலுங்கானா அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் சுத்தமான அரிசி கொடுக்கப்படும்.
கடந்த முறை நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெறாதவற்றையும் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளோம். கல்யாண லட்சுமி, ரிது பீமா திட்டம் உள்ளிட்டவை கடந்த தேர்தல் அறிக்கையில் இல்லை, இருந்தாலும் நிறைவேற்றியுள்ளோம். முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகை திட்டத்தை 2000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும். ஆண்டுதோறும் ரூ 500 உயர்த்தி அடுத்த 5 நாட்களுக்கு அந்த தொகை ரூ 5000 ஆக உயர்த்தப்படும் என்றார்.
இந்த தேர்தலுக்காக கே.சந்திரசேகர ராவ் மிகப் பெரிய பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதாகவும் தெரிகிறது. இன்று முதல் அவர் மொத்தம் 41 பொதுக் கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹுஸ்னாபாத்தில் கே சந்திரசேகர ராவ் தொடங்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 16, அக்டோபர் 17 ஆகிய தேதிகளில் ஜங்கோன், புவனகிரி, சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
சந்திரசேகர ராவ் நவம்பர் 9ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கள் செய்வார் என தெரிகிறது. சட்டசபை தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ்.கட்சி 105 பேர் அடங்கிய வேட்ட்பாளர்கள் ஏற்கெனவே அறிவித்துட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications