தர்ம சங்கடம்.. மோடியின் முடிவிற்கு எதிராக முதல்முறையாக சந்திரபாபு நாயுடு எடுக்கும் முடிவு.. போச்சு!
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற நிலையில் முதல்முறையாக மோடியின் கொள்கைக்கு எதிராக.. மோடிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றை செய்ய உள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு 70க்கும் மேற்பட்ட 'நேர்காணல்களை' வழங்கினார். அவரது பேட்டிகளில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்கள் இருந்தன,

அதில் முக்கியமான ஒன்று, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை எதிர்த்தது. எதிர்க்கட்சிகள் பேருந்து பயணத்தை பெண்களுக்கு இலவசமாக்கியுள்ளது, ஆனால் நான் இதைச் செய்ய மாட்டேன். அதில் விருப்பம் இல்லை. பேருந்து பயணம் இலவசம் ஆவதால் மெட்ரோவிற்கு வருமான இழப்பு ஏற்படுவதாக எல்டி இயக்குனர் கூறியதை கூட குறிப்பிட்டு பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.
பாஜக இலவசங்களை எதிர்ப்பதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில்தான் இலவச பேருந்து பயணத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது.
தர்மசங்கடம்: இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்று தற்போது முதல்முறையாக மோடியின் கொள்கைக்கு எதிராக.. மோடிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றை செய்ய உள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே தெலுங்கு தேசம் வெற்றிபெற்றுள்ளது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஜெகன் 175 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கினார்.
முதல்வராக பதவி ஏற்பு: சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்றது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது. 144 இடங்களில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்றுள்ளது. பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்ற நிலையில் அனைத்து இடங்களிலும் வென்றது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவி ஏற்றார். பவன் கல்யாண் துணை முதல்வர் மற்றும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு விழா: நான்காவது முறையாக நேற்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற என் சந்திரபாபு நாயுடு இன்று மாலை 4:41 மணிக்கு தனது அலுவலகத்தில் அலுவல் ரீதியாக பொறுப்பேற்கிறார்.
மோடிக்கு எதிராக என்ன முடிவு?: மோடியுடன் கூட்டணி வைத்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த இலவச பேருந்து திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் புதிய ஆந்திர அரசு அதைச் செய்வதாக உறுதியளித்துள்ளது. இலவச பேருந்து என்பது தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அந்த தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த APSRTC திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சாலைப் போக்குவரத்துக் கழகம் அல்லது ஆந்திர பிரதேசம் ஆர்டிசி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, மேலும் ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
இலவச பயணம் எதிர்ப்பு: பாஜக இலவசங்களை எதிர்ப்பதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில்தான் இலவச பேருந்து பயணத்தையும் எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. இலவசங்களை revadi culture என்று பாஜக விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சியான ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியே பாஜகவின் கொள்கைக்கு எதிராக முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications