சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பின்னணி என்ன
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், பிரச்சாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.நிரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சிர்சில்லா பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சந்திரசேகர ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து ரஞ்சன்னா சிர்சில்லா மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்காத பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு உரிய வகையில் சந்திரசேகர் ராவ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திர சேகர் ராவ் பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரத்திற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள் காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கக்கூடாது என்றும் ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நான்காம் கட்ட தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் பரபரத்து வருகிறது. இந்நிலையில் கேசிஆர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பி.ஆர்.எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications