100 சதவீதம் உறுதி.. அரசியலில் நுழையும் அம்பத்தி ராயுடு! ரெடியான சுற்றுப்பயணம்! எந்த கட்சி தெரியுமா?
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் மாஜி பேட்ஸ்மேனுமான அம்பத்தி ராயுடு அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. முதற்கட்டமாக அவர் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வரும் நிலையில் அவர் இணையப்போகும் கட்சி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் அம்பத்தி ராயுடு. 37 வயது நிரம்பிய இவர் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய இவர் ஐபிஎல்லில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ்மேன்னாக திகழ்ந்தார்.

இவர் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளில் விளையாடியபோது பல்வேறு முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்தார்.
நடந்து முடிந்த சீசனில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியுடன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். அதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தான் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு அம்பத்தி ராயுடு அரசியலில் நுழைவதாக தொடர்ந்து தகவல்கள் கசிந்து வருகின்றனர். அவர் பாஜகவில் இணைய போகிறார் எனவும், ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர போகிறார் எனவும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன.
இந்நிலையில் தான் சமீபத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, ஐபிஎல் டிராபியுடன் சென்று அம்பத்தி ராயுடு சந்தித்தார். இதையடுத்து பாஜகவுக்கு பதில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. இதுபற்றி அம்பத்தி ராயுடுவிடம் கேட்டபோது இந்த சந்திப்பில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை எனக்கூறி சென்றார். இருப்பினும் அம்பத்தி ராயுடுவை சுற்றிய அரசியல் சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை.
இதற்கிடையே தான் ஆந்திரா மாநிலம் குண்டூரில் ராயுடு மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவரை பத்திரிகையாள்கள் சூழ்ந்து அரசியலுக்கு எப்போது வர உள்ளீர்கள்? என்ற கேள்வியை கேட்டனர். இதற்கு ராயுடு, ‛‛ஆந்திரமாநில அரசியலில் களமிறங்குவேன். ஆனால் அதற்கு முன்னதாக மக்களின் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன். இதற்காக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்க்க சரியான திட்டத்தை உருவாக்க முடியும்'' என்றார்.
இருப்பினும் கூட அம்பத்தி ராயுடு எந்த கட்சியில் இணைய போகிறார்? என்பதை கூற மறுத்துவிட்டார். இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‛‛நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்'' என்றார். ஆனால் அம்பத்தி ராயுடு பாஜக அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் ஆழ்ந்து பார்த்தால் பாஜகவை விட அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் ஒருபகுதியாக தான் அவர் சமீபத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் அம்பத்தி ராயுடு அரசியலில் நுழைகிறார். மேலும் அவர் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தான் இணையும் கட்சி சார்பில் மச்சிலி பட்டணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அம்பத்தி ராயுடு எந்த கட்சியில் இணைய உள்ளார்? அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications