விடிய விடிய பலாத்காரம்.. துடிதுடித்த 28 பெண்கள்.. லேடீஸ் ஹாஸ்டலில் யாரது? சேவா ஆசிரமத்தில் பரபரப்பு
ஹைதராபாத்: 28 மாணவிகளும் நள்ளிரவு என்றும் பாராமல் போலீசுக்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.. பெண்கள் தங்கும் விடுதியில் நடந்த அட்டகாசம், ஆந்திர மாநில மக்களை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஏலூரில், மாணவிகளின் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது.. இங்கு ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் தங்கியிருக்கிறார்கள்.. அதாவது 3ம் வகுப்பு முதல் காலேஜ் படிக்கும் பெண்கள்வரை கிட்டத்தட்ட 45 பேர் இந்த ஹாஸ்டலில்தான் தங்கி வருகிறார்கள்.

சசிகுமார்: யர்ரகுண்டப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் என்ற 52 வயது நபர்தான், இந்த ஹாஸ்டலை சில வருடங்களாக நிர்வகித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.. இந்த 2 மனைவிகளும், இந்த விடுதியின் வார்டன்களாக உள்ளனர்.. இவர்களது மருமகள், விடுதியின் செக்யூரிட்டியாக உள்ளார்..
ஹாஸ்டல் பொறுப்பாளர் சசிகுமார், சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ ஒன்றையும் வைத்திருக்கிறார்.. நைட் நேரத்தில் திடீர் திடீரென ஹாஸ்டலுக்கு வருவாராம் சசிகுமார்.. அப்போது மாணவிகள் தங்கியிருக்கும் ரூம்களுக்கு அருகில் நின்றுகொண்டு, அவர்களை பார்த்தபடியே சிகரெட் பிடிப்பாராம்.. பிறகு, பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபடுவாராம்.. ஆனால், மாணவிகள் பயந்துகொண்டு, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்..
ஹாஸ்டல் வார்டன்: இப்படித்தான், கடந்த 15ம்தேதி ஹாஸ்டலுக்கு சென்ற சசிகுமார், அங்கிருந்த 3 மாணவிகளிடம் நைசாக பேச்சு தந்துள்ளார்.. "உங்களை எல்லாம் அழகாக போட்டோ எடுக்கிறேன், என்னுடன் வாருங்கள்" என்று வற்புறுத்தி தன்னுடைய காரில் அழைத்து சென்றுள்ளார்... போட்டோ ஸ்டியோவுக்கு செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்..
அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே, மாணவிகளை போட்டோ எடுக்காமல், அவர்களது கை, கால்களை கயிறுகளால் கட்டிப்போட்டுவிட்டு, விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது... மறுநாள் காலையில் அந்த மாணவிகளை ஹாஸ்டலுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டாராம்.
அதிர்ச்சி: ஆனால், அந்த 3 மாணவிகளும், அதிர்ச்சியிலிருந்து விலகவேயில்லை.. கடந்த 2 நாட்களாகவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் இதனை தாங்கி கொள்ளமுடியாமல், நேற்றுமுன்தினம் இரவு, போலீஸ் ஸ்டேஷனுக்கே மாணவிகள் சென்று புகார் தந்துவிட்டார்கள்.
இதையடுத்து, ஏலூர் போலீசார், சம்பந்தப்பட்ட ஹாஸ்டலுக்கு சென்று நேரடியான விசாரணையை ஆரம்பித்தனர்.. ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக அழைத்து, அவர்களிடம் இதுகுறித்து கேட்டார்கள். மாணவிகள் தந்த வாக்குமூலங்களையும் பதிவு செய்து கொண்டார்கள்.
மாணவிகள்: அப்போதுதான் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. அந்த 3 மாணவிகள் மட்டுமல்லாமல், ஏற்கனவே சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை, பலரையும் இப்படித்தான் காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டிப்போட்டு, சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியந்துள்ளது. ஆனால் அவரது மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் மாணவிகள் இருந்துள்ளார்கள்.
இதுகுறித்து டிஎஸ்பி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இந்த லேடீஸ் ஹாஸ்டலை அனுமதியில்லாமல் நடத்தி வந்திருக்கிறார்கள்.. சசிகுமார் மீது அங்குள்ள 28 மாணவிகளும் தனித்தனியாக புகார் தந்திருக்கிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும், மொத்தம் 28 மாணவிகளை காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்திருக்கிறார சசிகுமார்..
சிசிடிவி ஆய்வு: அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அறை பூட்டப்பட்டுள்ளது... அதனை திறந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால், இன்னும் நிறைய தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம்.. சசிகலா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், இப்போது சசிகுமார் தப்பி ஓடிவிட்டார்.. அவரது 2 மனைவிகள், மருமகளையும் காணவில்லை.. அதனால் கூண்டோடு அவர்களை பிடிக்க முயன்றுள்ளோம்" என்று உறுதி தந்துள்ளார்.
இந்த சம்பவத்தில், போலீசார் விசாரணைக்கு முன்பு, 4 மாணவிகள் தனித்தனியாக சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.. ஒரே சமயத்தில் இத்தனை புகார்கள் வரவும்தான், போலீசார் அலர்ட் ஆகியிருக்கிறார்கள்.. சசிகுமாரின் 2வது மனைவிக்குதான், இங்கு அதிக உரிமை இருக்கிறதாம். அவரது கட்டுப்பாட்டில்தான் விடுதி இயங்கி வந்ததாகவும் சொல்கிறார்கள். எனினும், கேமரா ரூம் பூட்டியிருப்பதால், அதனை திறந்து ஆய்வு செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications